/indian-express-tamil/media/media_files/2025/04/27/Mxdhq8lM4jIq4Z6shHNM.jpg)
கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி:
கோவை, செட்டிப்பாளையம் பகுதியில் தமிழர் பண்பாட்டு ஜல்லிக்கட்டு பேரவை சார்பாக இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதனை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். இதில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
-
Apr 27, 2025 18:14 IST
2 வயது குழந்தையை கடித்த நாய்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய் கடித்து 2 வயது குழந்தைக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.
-
Apr 27, 2025 18:10 IST
கோவையில் ரோடுஷோ
கோவையில் ரூ.10 கோடி மதிப்பில் அமைய உள்ள ஹாக்கி மைதான கட்டுமானப் பணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
Apr 27, 2025 17:49 IST
நாமக்கல் பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கம்
பள்ளி கோடை விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் நாமக்கல் கோழிப்பண்ணைகளில் 40% முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் வெயில் அதிகரிப்பால் தினசரி சுமார் 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. பள்ளிகளில் உள்ள மதிய உணவுத் திட்டத்திற்கு தினசரி அனுப்பப்பட்ட சுமார் 1 கோடி முட்டைகள் மற்றும் பச்சை முட்டைகளில் செய்யப்படும் மயோனஸ்க்கு தடை விதிக்கப்பட்டதாலும் சுமார் 80 லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
Apr 27, 2025 17:46 IST
கார்கள் நேருக்குநேர் மோதி விபத்து - 3 பேர் பலி
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் கீழூர் தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடல்களை கைப்பற்றி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 27, 2025 17:01 IST
சிவகங்கை - திமுக பிரமுகர் வெட்டி படுகொலை
சிவகங்கை தி.மு.க மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர் பிரவீன்குமார் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சாமியார்பட்டியில் உள்ள தனது தோப்பில் இருந்தபோது, 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பிரவீன்குமாரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடி உள்ளது.
-
Apr 27, 2025 16:33 IST
கோவையில் துணை முதல்வர் உதயநிதி ரோடு ஷோ
கோவையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தினார். உதயநிதிக்கு விமான நிலையத்தில் இருந்து தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே 2ம் நாள் பூத் கமிட்டி கருத்தரங்கிற்கு த.வெ.க தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
Apr 27, 2025 16:29 IST
கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே சேசுராஜபுரம் கிராமத்தில் மாடு மேய்க்கச் சென்ற விவசாயி மதலைமுத்து(60) என்பவர் யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Apr 27, 2025 15:46 IST
புதுச்சேரியில் ஜூன் 1-ம் தேதி வரை பள்ளிகள் விடுமுறை
புதுச்சேரியில் நாளை (ஏப்ரல் 28) முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2 ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
-
Apr 27, 2025 15:06 IST
கிருஷ்ணகிரியில் பயங்கர வெடி சத்தம் - வீடுகள் சேதம், மக்கள் அச்சம்
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை எம்.ஜி.ஆர். குடியிருப்பு பகுதியில் சக்திவாய்ந்த வெடி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வீட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டதோடு, வெடிப்பின் போது சிதறிய கற்கள் வீட்டின் மீது விழுந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த ஊத்தங்கரை போலீசார் வெடியை வைத்து விட்டு வீட்டுக்குள் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Apr 27, 2025 14:22 IST
2வது நாளாக நடைபெறும் த.வெ.க பூத் கமிட்டி கருத்தரங்கு
2வது நாளாக த.வெ.க பூத் கமிட்டி கருத்தரங்கு நடைபெறும் நிலையில், விஜய் கூட்ட நெரிசலில் சிக்காமல் நிகழ்ச்சி அரங்கிற்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விஜய் வரக்கூடிய சாலையில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
-
Apr 27, 2025 13:35 IST
செங்கல்பட்டு டாஸ்மாக்கில் ஊழியர்கள் மோதல் - 5 பேர் சஸ்பெண்ட்
செங்கல்பட்டு மாவட்டம், கீழ்வலம் கிராமத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மோதிக் கொண்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடையில் பணிபுரிந்து வந்த 4 ஊழியர் மற்றும் மதுபான கடையின் மேற்பார்வையாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
-
Apr 27, 2025 11:10 IST
மேயர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது
கோவை மேயர் ரங்கநாயகி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாநகராட்சி தற்காலிக ஊழியர் ஆனந்த் என்பவரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
Apr 27, 2025 09:43 IST
சிறுமிக்கு பாலியல் சீண்டல் - உணவு டெலிவரி ஊழியர் கைது
மதுரையில் அடுக்குமாடி குடியிருப்பில் உணவு டெலிவரி செய்யச் சென்ற நபர் 10 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 27, 2025 09:42 IST
8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம், நாகை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
Apr 27, 2025 09:33 IST
கோவையில் த.வெ.க-வினர் மீது வழக்குப் பதிவு
கோவை விமான நிலையத்தில் பொருட்களை சேதப்படுத்தியது மற்றும் பயணிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று கோவை வந்த அக்கட்சி தலைவர் விஜய்யை வரவேற்க திரண்ட தொண்டர்களால் இந்தப் பிரச்சனைகள் உருவானதாக குற்றம் சாட்டப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.