Coimbatore, Madurai, Trichy News Updates: நாளை மதுரை வருகிறார் த.வெ.க தலைவர் விஜய்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay tvk kovai

சிறுமி உயிரிழப்பு - தனியார் பள்ளி உரிமம் ரத்து

Advertisment

மதுரை, கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியின் குடிநீர் தொட்டியில், தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், சம்பந்தப்பட்ட பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளியின் தாளாளர் திவ்யா ராஜேஷ், உதவியாளர் வைரமணி ஆகியோர் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • Apr 30, 2025 19:30 IST

    தமிழகத்தில் 6 இடங்களில் சதமடித்த வெயில்

    தமிழகத்தில் வேலூர், சேலம், மதுரை, கரூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய இடங்களில் சதம் அடித்த வெயில். வேலூர் 104.9, சேலம் 102.2, மதுரை 100.4,  கரூர் 104, ஈரோடு 103.28, தர்மபுரி 100.76 டிகிரி  ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு



  • Apr 30, 2025 19:28 IST

    ஈரோட்டில் காங்கிரஸ் நிர்வாகி கடத்தல் 

    ஈரோட்டில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில்  காங்கிரஸ் நிர்வாகியான ஜுபைர் முகமது கடத்தப்பட்டுள்ளார். 2 காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், கடத்தி சென்று கருங்கல்பாளையம்  காவல் நிலையத்தில் ஒப்படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் நிர்வாகி ஜுபைர் முகமது-வை கடத்திய கும்பல். ஜுபைர் முகமதுவின் மனைவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்



  • Advertisment
    Advertisements
  • Apr 30, 2025 19:27 IST

    பெண் கொலை வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை

    புதுக்கோட்டையில் பெண் கொலை வழக்கில்  சுரேஷ் என்பவருக்கு தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு. கடந்த 2021ம் நகைக்காக சித்தி மகளை கொடூரமாக கொலை செய்த சகோதர‌ர் 
    சுரேஷுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



  • Apr 30, 2025 18:10 IST

    நாளை மதுரை வருகிறார் த.வெ.க தலைவர் விஜய்

    நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நாளை மதுரை வருகிறார். 14 வருடங்களுக்கு பிறகு, த.வெ.க  தலைவர் விஜய் நாளை (01.05.2025) மதுரை வருகிறார்.



  • Apr 30, 2025 16:55 IST

    கீழக்கரை ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் இளைஞர் உயிரிழப்பு

    அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், மதுரை வளையங்குளத்தைச் சேர்ந்த அய்யனார் (20) என்ற மாடுபிடி வீரர், நெஞ்சில் காளை முட்டியதில் படுகாயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

    மதுரை வளையங்குளத்தைச் சேர்ந்த அய்யனார் (20) என்ற மாடுபிடி வீரர், நெஞ்சில் காளை முட்டியதில் படுகாயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்



  • Apr 30, 2025 15:52 IST

    தூக்கு பாலத்தை முதல்முறை கடந்த சரக்கு கப்பல்

    பாம்பன் புதிய செங்குத்து தூக்கு பாலத்தை முதல்முறை கடந்த சரக்கு கப்பல்

    Video courtesy: Polimer TV



  • Apr 30, 2025 15:06 IST

    4 மாவட்டங்களில் மாலை 4 வரை மழைக்கு வாய்ப்பு

    ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மாலை 4 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Apr 30, 2025 15:00 IST

    தி.மலை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து

    திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும், அதன் பின்பே தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் மீறப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, ஜீவானந்தம் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்



  • Apr 30, 2025 14:23 IST

    லாரியில் இருந்து உருண்ட ராட்சத குழாய்கள் - 4 பேர் படுகாயம்

     லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட ராட்சத குழாய்கள் கார் மீது உருண்டு விழுந்ததில் 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Apr 30, 2025 14:19 IST

    பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வீட்டில் சோதனை

    சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சட்ட விரோதமாக பணி நியமனம் செய்தது தொடர்பாக ஜெகநாதனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



  • Apr 30, 2025 12:52 IST

    "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - இடைக்கால தடை தொடரும்"

    "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடை தொடரும்" என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 



  • Apr 30, 2025 12:12 IST

    குள்ளஞ்சாவடியில் பதற்றம் - போலீஸ் குவிப்பு

    இருதரப்பினர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார் 4 பேர் கைது செய்துள்ளனர். காவல் நிலையம் முற்றுகை - தடுத்து நிறுத்தியதால் போராட்டம். கடலூர்- விருத்தாசலம் சாலையில் அமர்ந்து தர்ணா. இளைஞர் தாக்கப்பட்ட வீடியோ வெளியான சூழலில் வெடித்த மோதல்



  • Apr 30, 2025 10:54 IST

    ராமநாதபுரத்திற்கு உள்ளூர் விடுமுறை

    ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 21-ஆம் தேதி மாலை தொடங்கி மே 22-ஆம் தேதி அதிகாலை வரை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 22-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்யும் வகையில் ஜூன் 14 -ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • Apr 30, 2025 09:48 IST

    பேராசிரியர் மீது வழக்குப்பதிவு

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் சக உதவி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் கண்ணன் மீது பாலியல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே மாநில பெண்கள் ஆணையம் தேசிய பெண்கள் ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.



  • Apr 30, 2025 09:42 IST

    சிறுவாபுரி முருகன் கோயிலில் சிவக்குமார் தரிசனம்

    Tourist Family திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோயிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம் செய்தார்.



  • Apr 30, 2025 09:40 IST

    சிறுமி உயிரிழப்பு - தனியார் பள்ளி உரிமம் ரத்து

    மதுரை, கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கிண்டர் கார்டன் மழலையர் பள்ளியின் குடிநீர் தொட்டியில், தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், சம்பந்தப்பட்ட பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளியின் தாளாளர் திவ்யா ராஜேஷ், உதவியாளர் வைரமணி ஆகியோர் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.



Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: