Coimbatore, Madurai, Trichy News Live Updates: இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது -போலீஸ் விசாரணை

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
tirupur murder xy
வேலூரில் அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து வைப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். வேலூரில் ரூ.197.81 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ரூ.7 கோடி செலவில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள், 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்களை ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
  • Jun 25, 2025 19:46 IST

    இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது -போலீஸ் விசாரணை

    திருப்பூரில் இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் கொலை வழக்கில், அதே அமைப்பைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி சுமன் மற்றும் அவரது நண்பர் தமிழரசன் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாலமுருகன் கொலை செய்யப்பட்ட விவகாரம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நரசிம்ம பிரவீன், அஸ்வின் ஆகியோரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.



  • Jun 25, 2025 18:44 IST

    செங்கல்பட்டு: துப்பாக்கி குண்டு பாய்ந்து பள்ளி மாணவன் படுகாயம்

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் குரலரசன். இன்று அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றுள்ளான். அப்போது, அப்பகுதியில் சுற்றி திரியும் உடல்நலம் பாதிக்கப்பட்ட தெருநாயை சுடுவதற்கு வெங்கடேசன் என்பவர் திருப்பரணை கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் சரத்குமாரை அழைத்துவந்து அவரை கொக்கு சுட பயன்படுத்தும் துப்பாக்கியை கொண்டு தெருநாயை சுட்டுள்ளனர். அப்போது அந்த துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு தவறுதலாக அவ்வழியாக சென்ற பள்ளி மாணவன் குரலரசன் தலையில் பாய்ந்தது. இதில் சிறுவன் படுகாயமடைந்தான். சிறுவனை அவரது பெற்றோர் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



  • Advertisment
  • Jun 25, 2025 18:16 IST

    பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி - 7 பேர் கைது

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். படுகாயமடைந்த நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அப்பெண் சிகிக்சை பெற்றுவருகிறார். தனியார் நிதி நிறுவனத்தில் முகவரான பச்சையம்மாள், பொதுமக்களிடம் பணம் வசூலித்து கட்டி வந்துள்ளார். இந்நிலையில் நிறுவனம் திடீரென மூடப்பட்டதால், பணம் கட்டியவர்கள் பச்சையம்மாளுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.



  • Jun 25, 2025 17:50 IST

    ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அருவிகளில் பரிசல்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jun 25, 2025 17:49 IST

    தஞ்சை பெரிய கோவிலில் ஆஷாட நவராத்திரி விழா துவக்கம்

    தஞ்சை பெரிய கோவிலில் 23-வது ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா இன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதன்பின்னர், வராகி அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து, மாலை ஆஷாட நவராத்திரி முதல் நாள் விஷேச அலங்காரமான இனிப்பு அலங்காரத்தில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 



  • Jun 25, 2025 17:16 IST

    கபினி அணையில் இருந்து 25,000 கன அடி நீர் திறப்பு

    கபினி அணையில் இருந்து காவிரியில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 25,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பதால் நீர் வெளியேற்றம் 30,000 கன அடியாக உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.



  • Jun 25, 2025 17:16 IST

    சாலை தடுப்பு மீது மோதிய அரசுப் பேருந்து: 5 பேர் படுகாயம்

    திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற அரசு பேருந்து 25 பயணிகளுடன் சென்றுள்ளது. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி அரசு பேருந்து வந்து கொண்டிருந்த போது திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை பகுதியில் உள்ள செண்டர் மீடியம் பகுதியில் வந்த போது அந்த பேருந்து நிலை தடுமாறி நேரடியாக செண்டர் மீடியனில் மோதியுள்ளது. இதில், பேருந்தில் பயணித்த பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.



  • Jun 25, 2025 17:11 IST

    அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறந்து வைப்பு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வேலூரில் ரூ.197.81 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ரூ.7 கோடி செலவில் 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டிடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டிடங்களை இன்று திறந்து வைத்தார்.



  • Jun 25, 2025 16:52 IST

    பார் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு

    ராமநாதபுரம் அருகே முன்விரோதம் காரணமாக பார் உரிமையாளரும், உடற்பயிற்சிக்கூடம் நடத்தி வருபவருமான நிர்மலுக்கு அரிவாள் வெட்டு. படுகாயம் அடைந்த நிர்மலுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. ஆட்டோவில் வந்த 3 பேர், நிர்மலை விரட்டி விரட்டி சரமாரியாக வெட்டி விட்டு தப்பிய மர்ம கும்பலை கைது செய்ய வலியுறுத்தி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நிர்மலின் உறவினர்கள் சாலை மறியல் நடத்தினர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது



  • Jun 25, 2025 16:02 IST

    சாம்பாரில் பல்லி - அரசு மருத்துவமனையில் உள்ள உணவகத்திற்கு பூட்டு

    தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் வாங்கிய சாம்பாரில் பல்லி கிடந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் உணவகத்தில் நடத்திய ஆய்வில், உணவகம் சுகாதாரமற்ற முறையில் இருந்தது அம்பலம்

    உணவகத்தைப் பூட்டிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உணவகத்தின் ஒப்பந்ததாரர் சுதாகரனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்



  • Jun 25, 2025 15:47 IST

    உப்பிலிபாளையம் அருகே சாலை நடுவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

    Video: Sun News



  • Jun 25, 2025 15:44 IST

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள்

    இன்று ஆனி மாத அமாவாசை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பரனூர் சுங்கச்சாவடியில் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.



  • Jun 25, 2025 15:30 IST

    ராமநாதபுரம் அருகே ஆள் இல்லாத வீட்டில் கொள்ளை

    ராமநாதபுரம் அருகே ஆள் இல்லாத வீட்டில் நகைகள், பணம் கொள்ளையடித்து போலீசிடம் இருந்து தப்ப வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி ஓட்டம். தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jun 25, 2025 15:02 IST

    திடீரென 80 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல்

    திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் முன் உள்ள கடல், 6 மாதங்களுக்கு பிறகு திடீரென 80 அடிக்கு உள்வாங்கியுள்ளது அதன் ஆபத்தை உணராமல் பாசி படிந்த பாறைகள் மீது ஏறி, பக்தர்கள் புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.



  • Jun 25, 2025 14:11 IST

    சிலிண்டர் வெடித்து வீடு சேதம் 

    நெய்வேலியில் சிலிண்டர் வெடித்து வீடுசேதம் அடைந்தது. வீட்டில் ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தி கீழே விழுந்து சமையல் அறையில் பரவிய தீயால் 
    வெடித்துச் சிதறிய சிலிண்டர். அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் 
    அசம்பாவிதம் தவிர்ப்பு



  • Jun 25, 2025 14:09 IST

    இந்து முன்னணி நிர்வாகி படுகொலை - 3 தனிப்படைகள் அமைப்பு

    திருப்பூரில் நிதி நிறுவனம் நடத்தி வந்த இந்து முன்னணி நிர்வாகி பாலமுருகன் 
    வெட்டிப்படுகொலை - 3 தனிப்படைகள் அமைப்பு. வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பாலமுருகன், சிசிடிவி காட்சிகள் 
    அடிப்படையில் போலீசார் விசாரணை



  • Jun 25, 2025 13:09 IST

    கோவை, நீலகிரிக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுப்பு

    கோவை, நீலகிரிக்கு இன்றும் நாளையும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.



  • Jun 25, 2025 11:50 IST

    நெல்லையில் தந்தையை கொன்ற மகன் கைது

    நெல்லை, மேலப்பாளையம் அருகே தந்தையை, மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்குச் சென்று படிக்க வேண்டும் என்று தனது மகனிடம் மாரியப்பன் என்பவர் அறிவுறுத்தியதால், அவரது மகனே கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொலை செய்யப்பட்ட நபரின் மகனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jun 25, 2025 11:32 IST

    ஆகஸ்ட் 15 முதல் த.வெ.க தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்

    ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் த.வெ.க தலைவர் விஜய், தனது முதற்கட்ட சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குறிப்பாக, தஞ்சையில் இருந்து விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. 



  • Jun 25, 2025 11:21 IST

    பெண்களை தாக்கியதாக புகார் - தலைமை காவலர் கைது

    திருவள்ளூர் அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் பெண்களை தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தலைமை காவலர் ராமன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை கைது செய்த போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Jun 25, 2025 10:28 IST

    திண்டுக்கல்லில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது

    திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு அருகே பூச்செடிகளுடன் சேர்த்து கஞ்சா செடி வளர்த்த நாகராஜ் என்ற நபர் கைது செய்யப்பட்டார். கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி, அதனை தானே வளர்த்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் அவரை கைது செய்தனர்.



  • Jun 25, 2025 09:49 IST

    "ஆடு-மாடு" மாநாடு

    வரும் ஜூலை 10 ஆம் தேதி நா.த.க சார்பில் மதுரை வீராதனூரில் ஆடு மாடுகளின் மாநாடு. மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டுக்கு சீமான் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



  • Jun 25, 2025 09:47 IST

    திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16,400 கன அடியாக உள்ளது

    திருச்சி முக்கொம்பு மேலணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16,400 கன அடியாக உள்ளது. இதில் 16,000 கன அடி நீர் காவிரியிலும், 400 கன அடி நீர் கிளை வாய்க்காலிலும் திறந்து விடப்படுகிறது.



  • Jun 25, 2025 09:45 IST

    84 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனில் திறக்கப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு

    84 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூனில் திறக்கப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டு. விநாடிக்கு 50,000 கன அடி வரை திறக்கப்படும் தண்ணீர் விரைவில் மேட்டூரை வந்தடையும் என தகவல் வெளியாகி உள்ளது. 



  • Jun 25, 2025 08:50 IST

    புகைப்படங்களை மார்பிங் செய்தவர் கைது

    இன்ஸ்டாகிராமில் பாலோயர்களை அதிகரிக்க பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து பதிவேற்றம் செய்து வந்த செங்கல்பட்டு மாவட்டம் வீராபுரத்தைச் சேர்ந்த ராஜா (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் உள்ளதாக சைபர் கிரைமில் அளித்த புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 



  • Jun 25, 2025 08:49 IST

    குற்றால அருவிகளில் குளிக்க தடை

    தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 



  • Jun 25, 2025 08:48 IST

    சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மூவர் கைது

    திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தனம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்த முகமது கொகோன் (45), முகமது கபீர் ஹோசன் (35) மற்றும் முகமது பிரமணிக் (18) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 



  • Jun 25, 2025 08:41 IST

    வேலூர், திருப்பத்தூரில் ஸ்டாலின் கள ஆய்வு

    வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காட்பாடிக்கு ரயில் மூலம் பயணம் செய்கிறார். இதைத் தொடர்ந்து, வேலூர் அரசு பல்நோக்கு உயர் மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.



Tamil News Live Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: