Advertisment

Coimbatore, Madurai, Trichy News Updates: அமித்ஷாவை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையுன் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
stalin dmk vizha

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையுன் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் கடந்த சில நாட்களாகவே  பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருந்து வருகிறது. அந்தவகையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.49 காசுக்கும் விற்பனையாகிறது.

Advertisment

மழை நிலவரம்: தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இதனால் தமிழ்நாட்டில் 23,24 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Dec 19, 2024 22:37 IST
    மருத்துவமனையில் பா.ஜ.க எம்.பி: ராகுல்காந்தி தள்ளிவிட்டதாக தகவல்!

    நாடாளுமன்ற வளாகத்தில், இன்று நடந்த தள்ளு முள்ளு பிரச்னையில், ராகுல்காந்தி தன்னை தள்ளிவிட்டதாக கூறி பா.ஜ.க எம்.பி ப்ரதாப் சாரங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 



  • Dec 19, 2024 20:43 IST
    அமித்ஷாவை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    டாக்டர். அண்ணல் அம்பேத்கர் அவர்களை அவதித்து பேசிய பாஜகவின் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோ. புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுகவினர் பங்கேற்று அமித்ஷாவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் குழந்தைவேலு, முன்னாள் அமைச்சர் பொன். முத்துராமலிங்கம் , மாவட்ட துணைச் செயலாளர் மூவேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



  • Advertisment
    Advertisement
  • Dec 19, 2024 18:31 IST
    மதுரையில் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை

    மேலூரை அடுத்த உறங்கான்பட்டி துணை மின் நிலையத்தில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (டிச.20) நடக்கிறது. இதனால் நாளை காலை 9 ம
    ணி முதல் மாலை 5 மணி வரை உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம், சக்குடி, விளாத்தூர், ஓடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும். இத்தகவலை மதுரை கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.



  • Dec 19, 2024 18:25 IST
    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் விபத்து

    மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் சில தொழிலாளர்கள் மாயமாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Dec 19, 2024 17:33 IST
    சிப்காட்களில் குழந்தைகள் காப்பகம் அமைக்க திட்டம்

    தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் நலன் கருதி, 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தைகள் காப்பகங்கள் மூலம் பணிபுரியும் பெற்றோரின், குறிப்பாக பெண்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும், பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றக் கூடிய சூழலை உருவாக்கும் எனவும் கூறப்படுகிறது.



  • Dec 19, 2024 16:46 IST
    கேரள மருத்துவ கழிவுகள் விவகாரம் - 2 பேர் கைது

    திருநெல்வேலி மாவட்டத்தில், கேரள மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் வாங்கி கொண்டு கழிவுகளை கொட்டியதாக சுத்தமல்லியை சேர்ந்த மனோகர் மற்றும் மாயாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் மனோகர் தலைமை ஏஜண்டாக செயல்பட்டது தெரியவந்துள்ளதாக மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.



  • Dec 19, 2024 16:11 IST
    கும்கி யானைகள் வரவழைப்பு

    நீலகிரி மாவட்டம், பந்தலூரில் சுற்றித் திரியும் புல்லட் என்ற காட்டு யானையை விரட்ட, 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. 



  • Dec 19, 2024 15:35 IST
    19 நாள்களாக வடியாத மழைநீர்

    விழுப்புரம் மாவட்டத்தில், 19 நாள்களாக மழை நீர் வடியாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.



  • Dec 19, 2024 15:14 IST
    வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடிகள் வளர்த்த இருவர் கைது

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா வளர்த்த இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், 104 கிலோ எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.



  • Dec 19, 2024 14:48 IST
    மதுரையில் திமுக ஆர்ப்பாட்டம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ராஜாஜி சிலை அருகே இன்று (டிச.19) அம்பேத்கர் அவர்களை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதற்கு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில சார்பு அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.



  • Dec 19, 2024 14:11 IST
    மக்களைத் தேடி மருத்துவம்: நேரில் சந்தித்த முதலமைச்சர்

    2 கோடி பயனாளிகளைத் தொட்டது ‘மக்களைத் தேடி மருத்துவம்' திட்டம். இரண்டாவது கோடி பயனாளியான ஈரோட்டைச் சேர்ந்த சுந்தரம்பாளுக்கு மருந்துப் பெட்டகத்தை வழங்கிய முதலமைச்சர். 



  • Dec 19, 2024 14:07 IST
    போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    பாஜக சார்பில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்திற்கு அஞ்சலி செலுத்தும் போராட்டம். மாலையுடன் வந்த பாஜகவினரை விரட்டி விரட்டி பிடித்த போலீசார். தாமிரபரணி ஆற்று பாலம் சேதமாகி ஒரு வருடமாகியும் சீரமைக்கவில்லை என குற்றச்சாட்டு. போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. 



  • Dec 19, 2024 13:40 IST
    நெல்லையில் கொட்டப்பட்ட கழிவுகள்: 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் - பசுமைத் தீர்ப்பாயம்

    4 கிராமங்களில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் உள்ளிட்ட அணைத்து கழிவுகளையும் கேரள அரசே பொறுப்பேற்று மூன்று நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு விடுத்துள்ளது. 



  • Dec 19, 2024 13:25 IST
    ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

    2 நாள் பயணமாக ஈரோடு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜயமங்கலம் பகுதியில் சாலையின் இருபுறமும் திரண்ட நிர்வாகிகளும், மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.



  • Dec 19, 2024 13:09 IST
    ஜமைக்காவில் துப்பாக்கிச்சூடு: நெல்லை வாலிபர் கொலை

    ஜமைக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், கொள்ளையர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். இறந்த, விக்னேஷின் உடலை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று அவரது உறவினர்கள் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனிடம் இன்று மனு அளித்தனர்.



  • Dec 19, 2024 12:57 IST
    'விஜய் செல்லாததில் எனக்கு வருத்தம் இல்லை' - சீமான் பேச்சு 

    "பாதிக்கப்பட்ட இடத்திற்கு விஜய் செல்லாததில் எனக்கு வருத்தம் இல்லை. ஆனால் சடங்கு என்று சொன்ன வார்த்தை தவறான வார்த்தை. தூத்துக்குடியில் நிவாரணம் வழங்கியது, கள்ளக்குறிச்சியில் இறந்தவர்களை சந்தித்தது எப்படி சடங்கு ஆகும்?.கடமை, சமூகப் பொறுப்பு என்று தான் சொல்ல வேண்டும்" என்று  நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். 



  • Dec 19, 2024 12:56 IST
    திருச்சியில் சீமான் பேச்சு 

    "தன் வீட்டிலேயே முதன்மையான அமைச்சர்களான  முதலமைச்சர்,  துணை முதலமைச்சர் என இரண்டையும் நீங்கள் வைத்துக்கொள்வீர்கள். இது எந்த மாதிரியான சமூகநீதி. இந்த கேள்வியை யாரும் கேட்க கூடாது என்பது தான் சனாதனம்" என்று திருச்சியில் செய்தியாளர்களிடம் சீமான் கூறினார். 



  • Dec 19, 2024 12:54 IST
    திருச்சி தி.மு.க-வினர் ஆர்ப்பாட்டம்  

    சட்டமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரை பாராளுமன்றத்தில் அவமரியாதை செய்த 
    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு ஆணைக்கிணங்க மத்திய மாவட்ட  செயலாளர் வைரமணி   தலைமையில் மாநகர செயலாளரும் மாநகர மேயருமான அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

    இந்த கண்டன  ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட திமுகவினர் கலந்து கொண்டு  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.



  • Dec 19, 2024 12:53 IST
    பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் - தி.மு.க-வினர் மாலை அணிவித்து மரியாதை 

     

    பேராசிரியர் அன்பழகனின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் சாஸ்திரி ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில்  பேராசிரியர் அன்பழகனின் திருவுருவப்படத்திற்கு ஏராளமான திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



  • Dec 19, 2024 12:47 IST
    தி.மு.க கண்டனம் ஆர்ப்பாட்டம் 

    அம்பேத்கர் குறித்து அவமரியாதையாக பேசியதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் சிந்தாமணி அண்ணாசிலை அருகே மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில், கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



  • Dec 19, 2024 12:46 IST
    கோவை வந்தார் ஸ்டாலின்!

    தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை வந்தடைந்தார். ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் வருகை புரிந்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தி.மு.க-வினர் வரவேற்பளித்தனர். 

     



  • Dec 19, 2024 11:58 IST
    ஏற்காட்டில் கடும் பனிமூட்டம் - ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

    சேலம் மாவட்டம்  ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்துடன் குளிர் வாட்டுகிறது. அங்கு கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது. முகப்பு விளக்குகளை ஒளிர விட்டபடி வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 



  • Dec 19, 2024 11:46 IST
    கோவை மறை மாவட்ட பேராயர்  கிறிஸ்துமஸ் வாழ்த்து

    தென்னிந்திய திருச்சபை கோவை மறை மாவட்ட பேராயர் திமோத்தி ரவீந்தர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். "கிறிஸ்மஸ் என்றாலே சந்தோசம் தான். நமக்கு மட்டுமே அல்ல. உலகத்திற்கே தான். மழை, வெயில் எப்படி எல்லோருக்கும் கிடைக்கிறதோ அதுபோல நமக்கு கிடைத்த சந்தோஷத்தை மற்றவர்களிடமும் பகிர வேண்டும் - உலக மக்கள் அவருக்கும் மகிழ்ச்சி கிடைக்க வேண்டும்." என்று அவர் கூறியுள்ளார். 



  • Dec 19, 2024 11:38 IST
    இ.பி.எஸ் கண்டனம் 

     

    கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் கொட்டப்பட்டிருப்பதற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

    "வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல. கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது.அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.  



  • Dec 19, 2024 10:01 IST
    நெல்லை பெட்ரோல் குண்டு வீச்சு - 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

    திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த பள்ளக்கால் புதுக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மைதீன். அவரது வீட்டில் நேற்று முன் தினம் இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் சிக்கிய சி.சி.டி.வி. பதிவு காட்சிகளின்படி, அப்பகுதியில் வேலைக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த மசூது என்பவரை வழிமறித்து கால் மற்றும் முதுகில் அதே கும்பல் அரிவாளால் வெட்டி தப்பியோடி இருப்பது தெரியவந்தது. இது குறித்த மைதீன் மற்றும் மசூது கொடுத்த புகாரின் பேரில், பாப்பாக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர்களை தேடி வந்தனர்.


    முதல்கட்டமாக அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததில், அடையாளம் தெரியாத கும்பல் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கி, மின்னல் வேகத்தில் மைதீன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Trichy Coimbatore Madurai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment