ஓவர் ஸ்பீடில் சென்ற பைக்கர் டி.டி.எப்.வாசன்… ஒரு வழக்கில் ஜாமீன், 2 வழக்குகள் இன்னும் பெண்டிங்
TTF Vasan gets bail in over speeding case; still 2 cases pending Tamil News: பைக்கர் டிடிஎப்.வாசன் மதுக்கரை உரிமையியல் - குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைத்தார். காலை முதல் மாலை வரை நீதிமன்றத்தில் இருந்த அவர் மாலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
Coimbatore News in Tamil: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன், பிரபல பைக்கர் டிடிஎப்.வாசன் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து சுமார் 155 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
Advertisment
இந்நிலையில், அவர் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போலீசார் டிடிஎப். வாசனை தேடி வந்த நிலையில், நேற்று மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு அவர் சரணடைந்தார்.
இதனையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு சரணடைந்த வாசன் மாலை 5.30 வரை நீதிமன்ற கூண்டில் அமர்ந்திருந்தார். இரண்டு நபர்களின் உத்தரவாதம் கொடுத்த பின் மாலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
போத்தனூர் வழக்கில் சரணடைந்த நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் வருகின்ற வெள்ளிக்கிழமை டிடிஎப். வாசன் ஆஜராக இருப்பதாக காவல் துறை வட்டாரம் தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிடிஎப் வாசன் மீது பதியப்பட்ட வழக்குகள்
டிடிஎப் வாசன் மீது போத்தனூர் காவல் துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். டிடிஎப் வாசன் மீது சூலூர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவிலும், மோட்டார் வாகன சட்டப்படி பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய 2 பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.