தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகிய கோவை வைஷ்ணவி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில் தி.மு.க-வில் இணைந்தார்.
கோவை, கவுண்டப்பாளையத்தைச் சேர்ந்த வைஷ்ணவி, தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இருந்து விலகினார். கட்சியினர் தொடர்ந்து நிராகரிப்பு மற்றும் உதாசீனம் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
தனது விலகல் குறித்து வைஷ்ணவி வெளியிட்ட அறிக்கையில், "என் மனதை கல்லாக்கிக் கொண்டு இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடந்த மூன்று மாதங்களாக நிராகரிப்பு, தடைகள், மிரட்டல்கள் என தொடர்ச்சியான மன உளைச்சலை சந்தித்தேன். ஒரு பெண் அரசியலில் வளர்வது சிலருக்குச் சங்கடமாக இருந்தது போல உள்ளது. என் மக்கள் பணிக்கு முற்றுப் புள்ளி வைக்க முயற்சிக்கின்றனர், அதனால் நானே தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்" எனக் கூறி இருந்தார்.
அவரது இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “அரசியல் பணி தொடர விரும்பினால் எங்கள் கட்சிக்கு வரலாம்” என அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் ம.தி.மு.க வின் இணையதள ஒருங்கிணைப்பாளர் மினர்வா ராஜேஷ், “மக்கள் பணி என்றால் அது ம.தி.மு.க மட்டுமே. தலைவர் வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் பணியாற்ற வாருங்கள்” என எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/1e7a64ad-bd2.jpg)
இந்நிலையில், இன்று மாலை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்த வைஷ்ணவி, தன்னை தி.மு.க வில் இணைந்துக் கொண்டார். வைஷ்ணவியின் வருகை தி.மு.க விற்கு ஒரு புதிய இளைய நாயகி கிடைத்து உள்ளதாக தி.மு.க வின் இளைய சமுதாயத்தினர் கூறி வருகின்றனர்.