Coimbatore | bjp: கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் நரேஷ். பா.ஜ.க மாவட்ட இளைஞரணி செயலாளராக இருக்கும் இவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் மாதம்பட்டி அருகே சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அவர்களுக்கு சென்ற ஆட்டோ ஒன்றை முந்த முயன்றுள்ளனர். அப்போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது நரேஷ் பயங்கரமாக மோதியுள்ளார். இதனை அடுத்து பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து விபத்து குறித்து பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நரேஷ்குமார் உயிரிழந்த தகவலை அடுத்து பிரேத பரிசோதனை அறையின் முன்பு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் திரண்டனர். இதனிடையே அங்கு வந்த பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் உறவினர்களை சந்தித்து கண்ணீர் மல்க ஆறுதல் கூறிய பின்னர் நரேஷ் குமார் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நரேஷ்குமாரின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்ட போது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஒரே நேரத்தில் கிளம்பியதால் அந்த சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சீர் செய்து அனுப்பினர் இரு சக்கர வாகன விபத்தில் பா.ஜ.க நிர்வாகி உயிரிழந்த சம்பவம் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“