கோவை: ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு இன்று திறந்து வைக்கிறார்.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பேரூர், செல்வபுரம் ஆகிய ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில் ரூ.470 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்திற்கு இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இவ்விழாவில், அமைச்சர்கள், அரசு தலைமைச் செயலாளர், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்,அரசு செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சமூக நல ஆணையர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
உக்கடம் பேருந்து நிலையம் அருகில் மேம்பால திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு உக்கடம் பேருந்து நிலையம், டவுன்ஹால், செல்வபுரம் செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
போக்குவரத்து போலீசாரும் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“