வால்பாறை அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு
வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
தமிழ் திரைப்படத்தில் புன்னகை மன்னன் என்ற படத்தின் மூலமாக இந்த நீர்வீழ்ச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மக்களுக்கு அறிமுகமான நீர்வீழ்ச்சியாகும்.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Advertisment
அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வால்பாறை அடுத்த கேரள எல்லையில் உள்ளது. இப்பகுதியில் நேற்று இன்றும் பெய்த கனமழையின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தமிழ் திரைப்படத்தில் புன்னகை மன்னன் என்ற படத்தின் மூலமாக இந்த நீர்வீழ்ச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியில் உள்ள மக்களுக்கு அறிமுகமான நீர்வீழ்ச்சியாகும். இந்தப் பகுதியில் வால்பாறை சோலையார் அணையில் இருந்து திறந்து விடப்படுகின்ற தண்ணீர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைகளில் பெருக்கெடுத்து வரும் ஆற்றுத் தண்ணீர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அடைகிறது.
Advertisment
Advertisement
இதனால் அப்பகுதியில் அதிக அளவில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், வால்பாறை அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil