கோவையில் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அவிநாசிலிங்கம் மகளிர் கல்லூரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், ’Virtual Tree Planting அடிப்படையில், நாம் பயன்படுத்தும் பொருள்களின் பயன்பாட்டை குறைத்து அதன் மூலம் கார்பன் அளவை குறைக்க முடியும்
2500 மாணவிகள் 5 நிமிடங்கள் தங்கள் செல்போனை அனைத்து வைத்து 5 கிராம் கார்பணுடன் சமன் செய்யும் நிகழ்வை தொடங்கி உள்ளோம். இதனை தொடர்ச்சியாக அவர்கள் ஒரு வருடம் செய்யும்போது 182 மரங்கள் நடுவதற்கு சமமாகும்.
2070 க்குள் இந்தியா கார்பன் சமநிலை அடைய வேண்டும் என்கின்ற இலக்கை பிரதமர் மோடி வைத்துள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள் நாம் பயன்படுத்தும் எரிபொருள்களில் பாதி non conventional energy source ஆக இருக்க வேண்டும் என்ற நோக்கில் 1 கோடி வீடுகளுக்கு சூரிய ஒளி மின் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
தமிழ்நாட்டில் கூட மீண்டும் மஞ்சப்பை திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது, அந்த வகையில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள virtual tree plantation மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.
மேலும், மாநில பட்ஜெட்டில் அனைத்து மாவட்டங்களின் பெயர்களும் கூறப்படுவதில்லை. இதற்கு முன்பு நடைபெற்ற பட்ஜெட்டில் கூட அனைத்து மாநிலங்கள் பெயரும் குறிப்பிடப்படவில்லை.
திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிகளுக்கு முழுக்க முழுக்க அரசியலுக்காக , பாஜக கூட்டணி குறித்து ஏதாவது கூற வேண்டும், மோடியைப் பற்றி திட்டினால் தான் அவர்களுக்கு அரசியல் வாழ்க்கை.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அண்ணாமலையும் கட்டியணைத்துக் கொண்டது சந்தோஷமாக பார்க்கிறேன், இரண்டு பேரும் இணைந்து இருந்ததை பார்க்கும் போது எவ்வளவு அற்புதமாக இருந்தது. அரசியலைக் கடந்த நாகரிகம் என்று பார்க்கும்போது அது ஒரு நல்ல விஷயமாக பார்க்கிறேன்.
தமிழ்நாட்டில் கிளை சிறைகள் என்பது குற்ற செயல் நடப்பதற்கு திட்டமிடுவதற்கான இடமாக சில சிறைகள் உள்ளன, எனவே அரசாங்கம் கிளைச் சிறகைகள் மூடுவது போன்ற நடவடிக்கைகளை முழுமையாக ஆராய்ந்து எடுக்க வேண்டும், என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“