கோவை சிங்காநல்லூர்- வெள்ளலூர் சாலையில் புதிய தார்சாலை அமைக்கபட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
கோவை மாநகரம் சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் சேதமடைந்தது. இதனால் பல மாதங்களாக வெள்ளலூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வந்தனர்.
இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் வெள்ளலூர் சிங்காநல்லூர் சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.
இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. விரைவில் இந்த மேம்பாலத்தின் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என்று வெள்ளலூர் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனிடையே மேம்பாலம் கட்டும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மேலும் பாலத்தை இணைக்கும் சாலைகளில் தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாலம் இன்னும் திறக்கப்படாத நிலையில் பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தது நிம்மதி அளிப்பதாக வெள்ளலூர் சுற்றூவட்டாரப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“