கோவை மாவட்டம் வெள்ளலூரில் கடந்த 20 ஆண்டுகளாக குப்பை கிடங்கு செயல்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர் மேலும் காற்றும் நீரும் மாசடைந்து குடிக்கவும் சுவாசிக்கவும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை முதல்வர் ஸ்டாலின் கோவை வருவதை ஓட்டி வெள்ளலூர் குப்பை கிடங்கு நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று மனு அளித்தார்.
மேலும், நாளை முதல்வர் உக்கடத்தில் பாலம் திறக்க இருக்கும் நிலையில் முதல்வர் திறக்காவிட்டாலும் பாலத்தில் வாகனங்கள் செல்லும் ஆனால் வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனையை தீர்வு இல்லாமல் இருக்கிறது.
வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு தீர்வு கிடைக்க விட்டால் அடுத்த முறை முதல்வர் ஸ்டாலின் கோவை வரும் போது கருப்பு கோடி காண்பித்து போராட்டம் நடத்தப் போவதாக தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி அதிகாரிகள் வேண்டுமென்று இந்த வழக்கை இழுத்தடித்துக் கொண்டு வருவதாகவும் சரி செய்யாமல் இருந்தால் தான் அடிக்கடி தீப்பிடிக்கும் கொள்ளை அடிக்க முடியும் என்று விமர்சனம் செய்தார்.
கோவை: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“