/indian-express-tamil/media/media_files/4zdWaSUNJQObU83ftSVH.jpg)
ஒரே நாளில் வெள்ளிங்கிரி மலை ஏறிய 3 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
Coimbatore: கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகிறார்கள். 7 மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்கும் சிவலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் வந்து வண்னம் உள்ளனர்.
இந்நிலையில், பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கபடுகின்றனர். இதையடுத்து, இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இதில், பக்தர்கள் சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வனத்துறையினர் தற்கால மருத்துவ முகாம்கள் அமைத்துள்ளனர். இங்கு பக்தர்கள் பரிசோதனை செய்யபட்டு பின்னரே மலை ஏற அனுமதிக்கபடுகின்றனர்.
அண்மையில் மலை ஏறிய பக்தர்களில் இருவர் கடந்த சில தினங்களுக்கு உயிரிழந்த நிலையில் நேற்று வெள்ளியங்கிரி மலை ஏறிய ஐதாரபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (68) என்பவர் நான்காவது மலையில் ஏறி கொண்டிருந்த போது திடீரென உடல்நலம் பாதிக்கபட்டு உயிரிழந்தார். இதேபோல் சேலத்தை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவரும் உடல்நிலை பாதிக்கபட்டு முதலாவது மலைப்பாதையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் உடல்களை மீட்டு மலை அடிவாரத்திற்கு எடுத்து வந்துனர். இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணி அளவில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியன் (46) என்பவர் இரண்டாவது மலை அருகே வழுக்குப்பாறை பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டுதாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வனத்துறையினர் சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் அங்கு சென்ற போது பாண்டியன் உயிரிழந்து உள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவரது உடலை மீட்ட மலை அடிவாரம் கொண்டு வந்த வனத்துறையினர் ஆலாந்துறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த பின்னர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆண்டு தோறும் மலை ஏறுபவர்கள் அதிகரித்து வரும் நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டும் உடல் நிலை பாதிக்கபட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. மலை ஏற அனுமதிக்கபடும் நாட்களில் மட்டுமே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் தற்காலிக மருத்துவ முகாம் குறைவாக உள்ளது. எனவே, அனைத்து வசதிகளுடன் இருக்கும் மருத்துவமனை அமைத்திட உடனடியாக அமைத்திட வேண்டும் என பக்தர்களின் கோரிக்கை வைத்துள்ளனார்.
ஒரே நாளில் வெள்ளிங்கிரி மலை ஏறிய மூவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.