வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்தனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலை ஒட்டி உள்ள மலை தொடரின் ஏழாவது மலை உச்சியில், சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க, ஆண்டுதோறும், பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத் துறையினர் அனுமதி அளிக்கின்றனர்.
இந்தாண்டு, கடந்த, பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமி தினத்தன்று, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி, ஈசனை வழிபடுவது வழக்கம்.
நேற்றிரவு சித்ரா பவுர்ணமி என்பதால் ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருகை புரிந்தனர்
இதையொட்டி கோவில் நிர்வாகம், வனத்துறை மற்றும் போலீசார் சார்பில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில் கோவை வனக்கோட்டம் போலாம்பட்டி வனசரகம் பூண்டி வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களை ட்ரோன் மூலம், தீ போன்ற நிகழ்வு ஏற்படாத வண்ணம் வனத்துறை சார்பில் கண்காணிக்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“