போதிய இடம் இல்லை; உரிமம் ரத்து: வ.உ.சி உயிரியல் பூங்கா விலங்குகள் இடமாற்றம்

இன்று கோவை வந்த உயிரியல் பூங்கா ஆணைய நிர்வாகிகள் இங்குள்ள விலங்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

இன்று கோவை வந்த உயிரியல் பூங்கா ஆணைய நிர்வாகிகள் இங்குள்ள விலங்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore VOC park and zoo Animals  relocate Tamil News

இன்றைய தினம் பாம்புகள் முதலைகள், குரங்குகள், ரோஸ் பெலிகன் பறவைகள் உள்ளிட்டவை இடமாற்றம் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து இங்குள்ள அனைத்து விலங்குகளும் இடமாற்றம் செய்யப்பட உள்ளது.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

coimbatore:மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் கடந்த 2022 ஆம் ஆண்டு கோவையில் செயல்பட்டு வரும் வ.உ.சி உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லாததால் பூங்காவின் உரிமத்தை ரத்து செய்தது. இதனால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உயிரியல் பூங்கா செயல்படாமல் இருந்து வந்தது. 

Advertisment

இந்த நிலையில் தற்போது வ.உ.சி உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் பறவைகள் அனைத்தும் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இங்குள்ள விலங்குகள் பறவைகள் அனைத்தும் வண்டலூர் பூங்கா, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், வேலூர் உயிரியல் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப்படுகின்றன. 

இதற்காக இன்று கோவை வந்த உயிரியல் பூங்கா ஆணைய நிர்வாகிகள் இங்குள்ள விலங்குகளை கணக்கிட்டு ஆய்வு செய்து அவற்றை இடமாற்றம் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டனர். 

Advertisment
Advertisements

இன்றைய தினம் பாம்புகள் முதலைகள், குரங்குகள், ரோஸ் பெலிகன் பறவைகள் உள்ளிட்டவை இடமாற்றம் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து இங்குள்ள அனைத்து விலங்குகளும் இடமாற்றம் செய்யப்பட உள்ளது. 

இதுகுறித்து வ.உ.சி உயிரியல் பூங்கா இயக்குநர் சரவணன் பேசுகையில், மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் 2022 ஆம் ஆண்டு போதிய  இட வசதி இல்லாததால் வ.உ.சி உயிரியல் பூங்கா உரிமத்தை ரத்து செய்தது. இதனால் இங்குள்ள விலங்குகளை எல்லாம் வண்டலூர், சத்தியமங்கலம், வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்று  பாம்புகள், குரங்குகள், முதலைகள், ரோஸ் பெலிக்கன் ஆகியவற்றை எடுத்து செல்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: