Advertisment

யானைகள் தொடர் மரணம்: மத்திய அரசு ஆணை, பசுமை தீர்ப்பாயம் உத்தரவு காற்றில் பறந்தது ஏன்?

வனத்துறை சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் இங்கு மின்சார வாரியம் மற்றும் வனத் துறை இருவருக்கும் உள்ள ஈகோ பெரிய அளவில் யானை பலிக்கு காரணமாக அமைகிறது.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore wild elephant dies

காட்டுயிர்கள் பாதுகாப்பிற்காக எவ்வளவோ சட்டங்களும் வழிகாட்டுதல்களும் இயற்றப்பட்ட பின்னரும் இதுபோன்ற உயிரிழப்புகள் தொடர்வது இச்சட்டங்களும் வழிகாட்டுதல்களும் உரிய முறையில்  நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

Advertisment

2019 ஆம் ஆண்டே உயர் அழுத்த மின்வடங்களால் காட்டுயிர்கள் உயிரிழப்பதைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசின் வனத்துறை உருவாக்கி அனைத்து மாநில மின்சார வாரியங்களும் அதனைப் பின்பற்றுமாறு கோரியிருந்தது.

“Eco-Friendly Measures to Mitigate Impacts of Power Transmission lines and other Power Transmission Infrastructures on Elephants and other Wildlife” எனும் வழிகாட்டுதலில் யானை வாழிடங்களிலும் யானை நடமாடும் இடங்களிலும் உள்ள மின்வடங்களை காப்பிடப்பட்ட வடங்களாக மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தின் அலட்சியத்தால் நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக் கோட்டத்திற்கு உட்பட்ட சேரம்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான எஸ்டேட் வழியாக செல்லும் உயரழுத்த மின்கம்பத்திற்கு அடியில் ஒரு ஆண் யானை, 4 காட்டுப் பன்றிகள், 2 கீரிப்பிள்ளை, 3 பாம்புகள், 1 காகம் ஆகியவை மின்சாரம் தாக்கி இறந்தன.

publive-image

இது தொடர்பான வழக்கில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட காடுகள் மற்றும் காட்டுயிர் நடமாட்டம் உள்ள இடங்களில் எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அங்கெல்லாம் மின்வடங்களை நிலத்திற்கு அடியில் புதைத்துக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் முடியாத இடங்களில் காட்டுயிர்கள் மின்வடங்களைத் தொட்டாலும் பாதிக்காதவாறு காப்பிடப்பட்ட மின்வடங்களையும், (Aerial Bunched Cables) பயன்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

மேலும் இதுபோன்ற விபத்துகள் தொடர்ந்து நடைபெறும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத்துறை செயலர், வனத்துறைத் தலைவர், முதன்மை தலைமை காட்டுயிர் பாதுகாவலர், மின்சாரத்துறை, வனத்துறை மூத்த அதிகாரிகள் கொண்ட குழுவை கட்டாயமாக அரசு உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவுகளை எல்லாம் பின்பற்றியிருந்தால் கடந்த 4 ஆண்டுகளில் பல காட்டுயிர் இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம். 

இனிமேலும் தாமதிக்காமல் மேற்கண்ட உத்தரவுகளை உடனடியாக தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி, காட்டுயிர் மனிதர் எதிர்கொள்ளல் சம்பவங்கள் அதிகம் நிலவும் இடங்களில் களச் செயல்பாடுகளையும் விழிப்புணர்வுப் பணிகளையும் மேற்கொண்டால் மட்டுமே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.

யானைகள் உயிரிழப்பு குறித்து முனைவர்  வழக்கறிஞர்  சண்முகம் கூறியதாவது. வனத்துறை சட்டத்தை  முழுமையாக அமுல்படுத்த வேண்டும் இங்கு  மின்சார வாரியம் மற்றும்  வனத் துறை இருவருக்கும் உள்ள  ஈகோ பெரிய அளவில் யானை பலிக்கு காரணமாக அமைகிறது.

மேலும் யானை வலசை பாதையில். மின்கம்பங்களில். முள் கம்பிகளை சுற்றிவைக்கும் முறை நடைமுறைபடுத்தலாம். தற்போது இம்மாதிரி செயல்பாட்டை கேரள அரசு மேற்கொண்டு உள்ளது.

அதுமட்டுமல்ல மின் வேலி அமைக்கபடுவதை இரண்டு துறை  ஆய்வு நடத்த வேண்டி உள்ளது, ஆனால் இருவருமே சரியாக கவனிப்பது இல்லை என்பதும்   கண்கூடாக பார்க்க முடிகிறது.

எனவே நிதி ஒதுக்கீடு செய்தும் சரியாக  வனத்துறை  மின்சார வாரியம் இருவரது அலட்சியம் தொடர் பலிக்கு வித்திடுகிறது. வனத்துறை சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தால் யானை உயிரிழப்பை தவிர்க்கலாம் என தெரிவித்தார் வழக்கறிஞர் சண்முகம்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment