/indian-express-tamil/media/media_files/YVPDBZrxyGhCNCG7wcWF.jpg)
வன உயிர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய மிதுனை அதிகாரிகள் எச்சரித்து அபராதம் வித்தித்துள்ளனர்.
coimbotore: கோவை பொள்ளாச்சி எடுத்த ஆனைமலை பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்கு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மிக முக்கியமான பகுதியான நவமலை உள்ளிட்ட இடங்களில் காலையில் நடமாட 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி மற்றும் பொதுமக்கள் பயணிக்க கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கின்றன.
நவமலை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் உள்ளிட்டவை அதிகமாக நடமாடுவதால், மனித விலங்கு முரண்களை தடுக்கும் விதமாக, வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கின்றார்கள். இந்த நிலையில், நவமலை பகுதியில் தோட்டத்திற்கு சென்ற கோட்டூரைச் சேர்ந்த அ.தி.மு.க தொண்டரான மிதுன் உயர் ஒலியுடன் (ஹைபீம்லைட்) வாகனத்தை இயக்கியுள்ளார்.
அப்போது அவர் ஒரு யானையை அபாயகரமான முறையில் விரட்டி இருக்கின்றார். மிரண்டு ஓடும் அந்த யானை, வனப்பகுதிகளுக்குள் நுழைந்து ஓடுகின்றது. இதனை வீடியோ எடுத்த அவர் தனது சமூக வலைதள பக்கத்திலே பகிர்ந்து இருக்கின்றார். இந்த வீடியோவை வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அந்தக் கார் வெள்ளை நிற ஸ்கார்பியோ என்பது தெரிய வந்தன.
இந்த வாகனத்தை ஓட்டி வந்தது கோட்டூரை சார்ந்த மிதுன் என்பதனை அறிந்து வனஉயிர் பாதுகாப்பு சட்ட பிரிவில் நடவடிக்கை எடுத்த வனத்துறை, மிதுனுக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளனர். வீடியோ காட்சிகளை பார்க்கும் போது வன உயிர் பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பது தெரிய வருகின்றன.
தடை செய்யப்பட்ட மற்றும் கட்டுப்பாட்டுடன் உள்ள வன பகிதிகளுக்குள் பயணிப்பதே குற்றம் என்ற நிலையில், பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலிலுள்ள வன விலங்குகளை துன்புறுத்துவது, யானை போன்ற விலங்கு இனங்களிடம் ஆபத்தான முறையில் நடந்து கொள்வது சட்டப்படி பெரும் குற்றம். வன உயிர் பாதுகாப்பு சட்டத்தை மீறிய மிதுனை அதிகாரிகள் எச்சரித்து அபராதம் வித்தித்துள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.
காரில் உயர் ஒலி லைட் போட்டு காட்டு யானையை விரட்டிய விவகாரம்: அ.தி.மு.க பிரமுகருக்கு ரூ. 1 லட்சம் அபாரதம்!https://t.co/gkgoZMHWlc | #Coimbatore | #elephantattack | #VIDEO | #AIADMK | 📹 @rahman14331pic.twitter.com/XdFfOC0og2
— Indian Express Tamil (@IeTamil) February 17, 2024
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.