கோவை, பேரூரில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை, நீண்ட போராட்டத்துக்கு பிறகு வனத் துறையினர், வனப் பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
கோவை, பேரூர் மதுக்கரை வனச் சரகத்தில் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவும் கடும் வறட்சி காரணமாக யானைகள், வனப் பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்கு படையெடுக்கின்றன. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்குள் புகும் காட்டு யானைகள், விளை நிலங்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீட்டில் வைத்து இருக்கும் அரிசி, காய்கறி போன்ற பொருள்களை சூறையாடுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் நேற்று கோவை வனச் சரகத்தில் இருந்து வெளியேறிய ஆண் ஒற்றை யானை நேற்று இரவு முதல் பேரூர் பச்சாபாளையம் பகுதியில் சுற்றி திரிந்தது.
நேற்று காலை அந்த யானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி அனைத்தும் தோல்வியடைந்தது.
பச்சாபாளையத்தில் இருந்து வெளியேறிய யானை சிறுவாணி மெயின் ரோட்டை கடந்து எதிர்புறம் உள்ள குளத்திற்குள் செல்ல முயன்றது அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டவாறு ஓடியதால் மிரண்ட யானை திடீரென சாலை ஓர கடைகளுக்குள் புகுந்து செல்ல முயன்றது.
கோவை பச்சாபாளையத்தில், வனச் சரகத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை- முதியவரை கீழே தள்ளிவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்#Coimbatore pic.twitter.com/FOiXLQBcTz
— Indian Express Tamil (@IeTamil) March 18, 2024
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மருதமுத்து என்பவரை, யானை கீழே தள்ளிவிட்டதில் அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது இதனை அடுத்து அவரை மீட்ட வனத்துறையினர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வனத்துறை வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அந்த ஒற்றை யானை இரவு மதுக்கரை வனச் சரகத்தில் இருந்து கோவை வனச் சரத்திற்கு உட்பட்ட வேடப்பட்டி கிராமத்திற்குள் புகுந்தது.
இதையடுத்து கோவை வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். எனினும் வனத் துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை யானை, பேரூர் தமிழ் கல்லூரி அருகே நிற்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் வனத் துறையினர் அங்கு சென்று பார்த்த போது, ஒற்றை யானை அங்கு நிற்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணி அளவில் கோவை வனச்சரக தடாகம் பிரிவு மருதமலை சுற்றி யானை, மடுவு சரக வனப் பகுதிக்குள் அனுப்பப்பட்டு உள்ளதாக வனத்துறை தெரிவித்து உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.