/indian-express-tamil/media/media_files/FgE1YbsnGM5qDuiP2Gb8.jpg)
Coimbatore
கோவை மதுக்கரை வனச் சரகத்துக்கு உட்பட்டகுப்பனூர், தீத்திப்பாளையம் கிராமங்களில், வனப் பகுதியில் இருந்துவெளியேறிய காட்டு யானைகள் சுற்றி வருகின்றன.
நேற்று முன்தினம் குப்பனுார்அருகில் உள்ள முள்காட்டிற்குள் காட்டு யானைகள் புகுந்தது.
கோவை மருதமலை பகுதியில் சுற்றி வரும் காட்டு யானைகள்- ட்ரோன் மூலம் கண்காணித்து வரும் வனத்துறை#Coimbatorepic.twitter.com/Fx0YPSLwKw
— Indian Express Tamil (@IeTamil) November 17, 2023
இந்நிலையில் மதுக்கரை வனத்துறையினர், அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் மூலம் யானைகளை கண்காணித்த வனத்துறையினர் இரவில் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
தற்போது அந்த யானைகள் மதுக்கரை வனப் பகுதியில் இருந்து கோவை வனச் சரகத்திற்குள் வந்துள்ளது. மருதமலை பகுதியில் உள்ள யானை முகடு பகுதியில் சுற்றி வருவதால் கோவை வனசரக வனத்துறையினர், யானைகளை கண்காணித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.