scorecardresearch

பெண்ணின் முகத்தை மார்பிங் செய்து சமூக வலைதளத்தில் பரப்பியவர் கைது

இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Coimbatore

கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 26 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முகம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு அப்பெண்ணின் குடும்பத்தாருக்கு வாட்ஸ்அப் மூலம் அறிமுகமில்லாத எண்ணில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

புலன் விசாரணையில் இச்செயலை செய்தது செல்வபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார்(27) என்பது கண்டறியப்பட்ட நிலையில் சைபர் கிரைம் போலீசார் அருண்குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது போன்ற குற்றங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore woman morphing photo man held in cybercrime case