கோவை வெள்ளலூர் பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பையை உரமாக பிரிக்கும் பணியும் நடைபெறும். இந்நிலையில் இங்கு பணிபுரியும் கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (23) என்பவர் இன்று (செப்.28) இயந்திரத்திற்குள் சென்று சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார்.
/indian-express-tamil/media/media_files/68Tij3l1XPqlmAn5ZAh6.jpeg)
அப்போது அங்கு வந்த மற்றொரு ஊழியர்கள் அவர் இயந்திரத்தில் இருப்பதை கவனிக்காமல் இயந்திரத்தின் சுவிட்ச்சை ஆன் செய்துள்ளனர். சத்யா இயந்திரத்திற்குள் சிக்கிக் கொண்டார். அவரது இரு கால்களும் இயந்திரத்தில் சிக்கியது.
/indian-express-tamil/media/media_files/81X2pf8650rdOgz8uvDI.jpeg)
பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு இயந்திரத்தை நிறுத்தி படுகாயம் அடைந்த அவரை தெற்கு தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“