கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன். இவர் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் இவரது நண்பருக்கு இவரது ஆர்.ஒன் 5 (YAMAHA - R15) வாகனத்தை கொடுத்து உள்ளார்.
அவரது நண்பர் கணபதி பகுதியில் உள்ள கேசவன் வீட்டிற்கு முன்பாக இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார். நேற்று முன் தினம் காலை சரியாக 3 மணி அளவில் 3 நபர்கள் அந்த பகுதிக்கு வந்து அந்த
ஆர்.ஒன்.5 ("YAMAHA R15") இருசக்கர வாகனத்தை ஹேண்ட்பாரை உடைத்து திருடி சென்றுள்ளனர்.
இந்த சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து கேசவன் சரவணம்பட்டி காவல்துறையினரிடம் புகார் மனு கொடுத்தார். சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“