கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் கோவை செல்வபுரம் காவல் நிலையம் முன்பு கெத்தாக நின்று சர்ச்சைக்குரிய வசனங்களுடன் ரீல்ஸ் எடுத்து அந்த வீடியோவை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களை கண்காணித்த செல்வபுரம் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் சந்தோஷ் குமாரின் ரீல்ஸை பார்த்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர் மீது குற்ற நோக்கத்துடன் செயல்படுதல், மின்னனு முறகயில் தவறான தகவல்களை பரப்புதல் இருகுழுக்கள் இடையே பகை உணர்வை தூண்டுதல் உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“