/indian-express-tamil/media/media_files/ihVAC2RV9rHHGsDicLE6.jpeg)
Coimbatore
கோவையில் ஆபாச படம் பார்த்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவலர்கள் போலும், நடமாடும் நீதிமன்றம் போலும் நடித்து பல்வேறு இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பலை சைபர் கிரைம் போலிசார் கைது செய்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த சபரி என்ற இளைஞர் சக நண்பர்களுடன் சேர்ந்து சில இளைஞர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் ஆபாச படங்கள் பார்த்துள்ளீர்கள். உங்கள் மீது நடமாடும் நீதிமன்றம் மூலம் மீது வழக்கு புனையப்பட உள்ளது. இதில் இருந்து தப்பிக்க பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார்.
மேலும் செல்போனில் பேசி கொண்டிருக்கும் போது காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி ஒலியையும் எழுப்பி உள்ளார். இதனை உண்மை என நம்பிய இளைஞர்கள் சபரி கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளனர்.
இந்த முறையை பயன்படுத்தி கொண்டு சபரி மற்றும் அவரது சக நண்பர்கள் பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் சபரியின் குழு மீது சந்தேகமடைந்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலிசார் இதனை செய்த சபரி(22), ஜப்பான்(எ) ஆலன்(19), கிச்சா(எ) கிஷோர்(20), சின்ன பகவதி(எ) பிரிவின் மோசஸ்(20), வெய்ட்டி(எ) அபிஷேக் குமார்(20), வடக்கு(எ) தனுஷ்குமார்(20) , தோனி(எ) பிரவீன் குமார்(20), அப்பு(எ) அகஸ்டின்(20), மனோஜ்(20) ஆகிய 9 பேரை கைது செய்துள்ளனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us