கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள கற்பகம் கல்லூரியின் பேருந்து ஒன்று சூலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து இன்று (ஆக.13) மாணவர்களை ஏற்றிக் கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டு இருந்தது. ரத்தினவேலு என்பவர் கல்லூரி பேருந்தை ஓட்டி வந்து உள்ளார்.
பாப்பம்பட்டி அருகே சென்று கொண்டு இருந்த போது கோழி தீவனம் ஏற்றி வந்த கனரக லாரியில் பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது. இ ந்த விபத்தில் 4 மாணவிகள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
இவர்களில் 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில் அருகில் இருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவு விபத்துக்கு காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
காயமடைந்த மாணவர்கள் அருகே இருக்கக் கூடிய தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“