Advertisment

'செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு இவ்வளவு நாள் அமைதியா இருந்தேன்' - வாட்ஸ்அப்-ல் கதறும் இளம்பெண்!

ராணியின் இந்த சாட்டிங்கும், தனி அறையில் தலைமை நிர்வாகி ராணியிடம் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோவும் சமூக தளங்களில் வெளியாகி உள்ளது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கல்லூரி நிர்வாக இயக்குனரின் செக்ஸ் டார்ச்சர்

கல்லூரி நிர்வாக இயக்குனரின் செக்ஸ் டார்ச்சர்

கோவையில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாக இயக்குனரின் செக்ஸ் டார்ச்சர் தாங்கமுடியவில்லை என்று அதே கல்லூரியைச் சேர்ந்த பெண் கல்லூரி ஊழியர் வாட்ஸ்அப்-ல் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், அலுவலகராக பணியாற்றி வருபவர் 23 வயதான இளம்பெண் ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அந்த கல்லூரியின் நிர்வாக இயக்குனரின் வயது 63. இவர் கல்லூரி அலுவலகத்தில் பணிபுரியும் இளம்பெண்களுக்கு பாலியல் ரீதியாக பல்வேறு தொல்லைகளை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல், ராணிக்கும் அவர் கடந்த இரு வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கல்லூரி நிர்வாகியின் மகனுக்கு, வாட்ஸ் அப் மூலம் ராணி இதனை தெரியப்படுத்தி இருக்கிறார். அந்த சாட்டிங்கில், 'சார் உங்கள நம்பித் தான் எம்டி சார் கொடுத்த செக்ஸ் டார்ச்சர மறச்சிட்டு அமைதியாக இருந்தேன். நேத்து கூட நீங்க பேசும் போது வீடியோல இருக்கிறது நான் இல்லைனு சொல்ல சொன்னீங்க. எனக்கு ஏதாச்சும் ஆச்சுனா நீங்களும் எம்டி சாரும்தான் காரணம். என்னால் முடியலை. நான் இருக்கிறது பிரயோஜனம் இல்லை' என்று அனுப்பியுள்ளார்.

ராணியின் இந்த சாட்டிங்கும், தனி அறையில் தலைமை நிர்வாகி ராணியிடம் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோவும் சமூக தளங்களில் வெளியாகி உள்ளது.

நிர்மலாதேவி விவகாரமே இன்னும் ஓய்ந்தபாடில்லாமல் போய்க் கொண்டிருக்க, 63 வயதான கல்லூரி தலைமை நிர்வாகியின் காம லீலைகள் தற்போது புயலைக் கிளப்ப ஆரம்பித்து இருக்கிறது.

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment