ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் ரூ.30,000 இழந்ததால், 19 வயது கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 1 மணியளவில், மகாலட்சுமியின் தாய் சாந்தி தனது மகள் தொலைபேசியை அதிக நேரம் பயன்படுத்துவதைப் பார்த்து, அவளை தூங்கச் சொன்னார். சில நிமிடங்களில் படுக்கைக்குச் செல்வேன் என்று அந்தப் பெண் பதிலளித்துள்ளார்.
அடுத்தநாள் காலை தனது மகள் தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்த தாய், அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். மகாலட்சுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளிக்க முயற்சித்தபோது, அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தற்கொலை செய்துகொண்ட பெண், ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் 30,000 முதலீடு செய்திருப்பதைக் கண்டுபிடித்ததாக உறவினர் தெரிவித்துள்ளார்.
மேலும், பணத்தை முதலீடு செய்வதாக ஏமாற்றியவர்கள் பணத்தைத் திரும்பக் கொடுக்கத் தயாராக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பின் பெண்ணின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil