செல்போனில் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி, தொட்டியம் அடுத்த நாச்சப்புத்தூர் கருங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் . இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகே செல்போனில் பேசி கொண்டிருந்த போது அருகில் இருந்த மின்கம்பத்தில் சாய்ந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கிய நிலையில் முத்துக்குமார் தூக்கி வீசப்பட்டார்.
இந்நிலையில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், உறவினர்கள் முத்துக்குமாரை காரில் வைத்து முசிறி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.