சென்னையில் கொடூரம் : கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவர் படுகொலை

சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின்போது கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை

சென்னையில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் திருவள்ளூர் அருகே வெள்ளவெடு பகுதியில் உள்ள தனியார் மரைன் இன்ஜினியரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அந்த மாணவர் தனது சக கல்லூரி மாணவர்கள் சிலருடன் கல்லூரி விடுதியின் மாடியில் கிறிஸ்துமஸ் பண்கையை கொண்டாடியுள்ளார். அப்போது மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த மாணவர் பெயர் ஆதித்யா சர்மா (20). என்பதும், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட மோதலில் சக நண்பர்களால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

கல்லூரி விடுதியின் 6-வது மாடியில் நடைபெற்ற இந்த பண்டிகை கொண்டாட்டத்தில், சில இறுதி ஆண்டு ​​மாணவர்களிடையே சண்டை ஏற்பட்டது. மாணவர்களில் ஒருவர் ஆதித்யா சர்மாவை உடைந்த பிளாஸ்டிக் பாட்டிலால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த வெல்லவேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா தேவி வழக்குப் பதிவு செய்து, இந்தசம்பவம் குறித்து விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதில் 171 கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள ஹாஸ்டலில் 170 மாணவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சண்முகபிரியா மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் ஆகியோர் விடுதி வளாகத்திற்கு பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 30 க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் விசாரித்தது.

இந்த சம்பவம் நடைபெற்தற்கான காரணம் தெளிவாக தெரியாத நிலையில், விசாரணை  தீவிரமாக  நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு்ளளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: College student murdered christmas celebration chennai

Next Story
நெஞ்சில் நீங்காத வலி தந்த ஆழிப்பேரலை; 16ம் ஆண்டு நினைவு தினம்…Tsunami 16th anniversary people pay tributes across coastal districts of Tamil Nadu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com