சமூக வலைதளத்தில் தவறான பதிவு – காதலர்கள் தற்கொலை

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், முகநூலில் தவறான பதிவிட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவியும், அவருடைய காதலரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். நெய்வேலியை அடுத்த குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தவறான வார்த்தைகளை முகநூலில் அனுப்பியுள்ளார். இதனைக் கண்டித்து அந்த மாணவி…

By: June 11, 2019, 8:51:18 AM

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், முகநூலில் தவறான பதிவிட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவியும், அவருடைய காதலரும் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்.

நெய்வேலியை அடுத்த குறவன் குப்பம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தவறான வார்த்தைகளை முகநூலில் அனுப்பியுள்ளார்.

இதனைக் கண்டித்து அந்த மாணவி பதில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பிரேம் குமாரின் உறவினர்கள், அந்த மாணவியின் வீட்டுக்கு வந்து பிரச்னை செய்ததாகத் தெரிகிறது.

இந்த சம்பவத்தால் மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். பின்னர் இதைக் சேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த, மாணவியின் அத்தை மகனும் காதலருமான விக்னேஷும் மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிரேதங்களை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இருவரின் தற்கொலைக்கும் காரணமாக இருந்த முகநூல் பதிவர் பிரேம்குமாரை 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகிறார்கள்.

இந்நிலையில், பிரேம்குமாரை கைது செய்யக்கோரி விருத்தாசலம், கடலூர் சாலையில் மாணவியின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்த முயன்றும் கலைந்து செல்லாத அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:College student suicide due to facebook post neyveli

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement