மதுராந்தகம் அருகில் பேருந்து லாரியில் உரசி ஏற்பட்ட விபத்தில், பேருந்து படிகட்டில் தொங்கியபடி பயணித்த 4 மாணவர்கள் உயிரிழப்பு.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ராமநாதபுரம் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள மாணவர்கள் படித்து வருகின்றனர். சென்னை – திருச்சி தேசிய நெஞ்சாலையில் தனியார் பேருந்து அதிக கூட்டத்துடன் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் இந்த பேருந்தை உரசிக்கொண்டு லாரி முன்பு சென்றுள்ளது.
இதில் பேருந்தில் தொங்கி பயணித்த மோனிஷ், கமலேஷ், தனுஷ் உள்ளிட்ட 3 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வந்த ரஞ்சித் என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 5 மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். . இந்த சம்பவம் குறித்து மேல்பருவத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“