Advertisment

கோவையில் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து பேராசிரியர் தற்கொலை; போலீஸ் விசாரணை

கோவையில் நைட்ரஜன் வாயுவை முகர்ந்து கல்லூரி பேராசிரியர் தற்கொலை  செய்துகொண்டார். பேராசிரியரின் தற்கொலைக்கு பங்குசந்தையில் ஏற்பட்ட நஷ்ட்டம்  காரணமா என்பது  குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
Nov 20, 2023 09:27 IST
New Update
singanallur ps

கோவையில் நைட்ரஜன் வாயுவை சுவாசித்து பேராசிரியர் தற்கொலை; போலீஸ் விசாரணை

கோவையில் நைட்ரஜன் வாயுவை முகர்ந்து கல்லூரி பேராசிரியர் தற்கொலை  செய்துகொண்டார். பேராசிரியரின் தற்கொலைக்கு பங்குசந்தையில் ஏற்பட்ட நஷ்ட்டம்  காரணமா என்பது  குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisment

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் தனபிரபு கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வேதியியல் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். 

சிங்காநல்லூர் அருகே உப்பிலிபாளையம் பாரதி நகரில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தார். மேலும்  தனபிரபு கல்லூரியில் உள்ள வேதியியல் ஆய்வுக்கூடத்தில் நைட்ரஜன் வாயு குறித்து மாணவர்களுக்கு பாடத்தை கற்றுக் கொடுத்து வந்தார். இந்த நிலையில்  திடீர் என்று பணியில் இருந்து விலகினார்.

ஆனாலும், மாணவர்களை வீட்டுக்கு அழைத்து சிறப்பு வேதியியல் வகுப்புகளை நடத்திவந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக நைட்ரஜன் வாயு சிலிண்டர் ஒன்றை வாங்கி வைத்திருந்தார்.

இந்த நிலையில் தனபிரபு நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த நிலையில் நேற்று காலையில் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை தட்டி பார்த்தனர் ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை மேலும், வீட்டிலிருந்து ஒரு வாயு வெளியே வந்து கொண்டிருந்ததால் இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

அதன் பெயரில் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர் அப்போது நைட்ரஜன் வாயு சிலிண்டர் திறந்து இருந்தது அதை உடனடியாக போலீசார் மூடினர் மேலும் அதன் அருகில் தனபிரபு பிணமாக கிடந்தார் அங்கு ஒரு கடிதம் இருந்தது அதில் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததுள்ளது.

இதனால், சிலிண்டர் திறந்துவிட்டு நைட்ரஜன் வாயு முகர்ந்து தனபிரபு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது இதை அடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இது குறித்து போலீசார்  கூறும்போது  தனபிரபுவுக்கு திருமணம் ஆகவில்லை, வங்கியில் லட்சக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்துள்ளார். மேலும் பங்கு சந்தையில் அதிக  அளவில் பணத்தை முதலீடு செய்து வந்துள்ளதும் அதில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அதனால் தற்கொலை செய்துகொண்டரா என்பது தெரியவில்லை மேலும் அது பற்றி போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment