சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து நவம்பர் 22ம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து நவம்பர் 22ம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
Chief Justice of Madras High Court : உச்ச நீதிமன்ற கொலீஜியம் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருக்கும் முனீஷ்வர்நாத் பண்டாரியை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சஞ்சீவ் பானர்ஜி மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து பொறுப்பு தலைமை நீதிபதியாக 2வது மூத்த நீதிபதியாக இருந்த துரைசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
Advertisment
Advertisements
அதனை தொடர்ந்து அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாகவும் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து நவம்பர் 22ம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போது அவரையே உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை கே. ஸ்ரீநிவாச ரெட்டி, ஜி. ராமகிருஷ்ண பிரசாத், வெங்கடேஷ்வரலு நிம்மகடா, ராஜசேகர் ராவ், சட்டி சுப்பா ரெட்டி, ரவி சீமலப்பட்டி, மற்றும் வி. சுஜாதா ஆகிய ஆந்திரப்பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கலாம் என்ற பரிந்துரையையும் கொலீஜியம் வழங்கியுள்ளது.
ஒரிசா மாநில உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் வி. நாராசிங், சஞ்சய் குமார் மிஷ்ரா, பிராஜா பிரச்சன்னா சட்டபதி மற்றும் ராமன் முராஹாரி ஆகிய வழக்கறிஞர்களை ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கவும் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil