சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான்ன சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1959.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை நிர்ணயிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையிலேயே தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதேமாதிரி மாதத்தின் முதல் தேதியில் கேஸ் சிலிண்டர் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன. இந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் ரூபாய் 6.50 குறைந்துள்ளது. இதன்படி வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூபாய் 1,959.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டுக்கு பயன்படுத்தப்படும் 14 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த நவம்பர் மாதம் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.61.50 உயர்ந்து ரூ.1,964.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறாக ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் கொண்டு வந்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். தற்போது வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ. 1,959.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.