Advertisment

வணிக சிலிண்டர் விலை ரூ.30 குறைவு: புதிய விலை என்ன?

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.30.50 குறைந்து ரூ.1,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Commercial LPG cylinder prices slashed by Rs.83
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று (ஏப்ரல் 1) ரூ.30.50 காசுகள் குறைந்து  ரூ.1,930-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 மாதங்களாக ரூ.36 அதிகரித்திருந்த நிலையில் இன்று விலை குறைக்கப்பட்டுள்ளது. 

Advertisment

பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது.  ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.30.50 குறைந்து ரூ.1,930 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.818-க்கு விற்பனையாகிறது.

முன்னதாக, மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.100 குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி ரூ.918-ல் இருந்து ரூ.818 ஆக விற்பனையாகிறது. 

 

 

 

Gas Cylinder
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment