சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று (மே1) ரூ.15..50 காசுகள் குறைந்து ரூ.1,906-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணையித்துக் கொள்ள மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்துள்ளது.
ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு, 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன.
அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்து ரூ.1,906 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.
ரூ.1,921.50க்கு விற்று வந்த வணிக சிலிண்டர் விலை ரூ.1,906ஆக குறைந்துள்ளது. வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனையாகிறது.