Advertisment

நடிகர் சூரியின் ஓட்டலில் வணிக வரித்துறையினர் திடீர் ரெய்டு.. காரணம் என்ன?

மதுரையில் செயல்பட்டு வரும் நடிகர் சூரிக்கு சொந்தமான 'அம்மன்' உணவகத்தில் வணிக வரித்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

author-image
WebDesk
New Update
நடிகர் சூரியின் ஓட்டலில் வணிக வரித்துறையினர் திடீர் ரெய்டு.. காரணம் என்ன?

திரைப்பட நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 'அம்மன்' என்ற பெயரில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. அண்மையில் தொடங்கப்பட்ட இந்த உணவகங்களில் குறைந்த விலையில் உணவு வழங்கப்படுவதால் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும். மக்கள் அதிகம் வந்து சாப்பிடுவர்.

Advertisment

இந்நிலையில், இந்த உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, அம்மன் உணவகங்களின் தலைமையிடமாக செயல்படும் தெப்பக்குளம் பகுதியில் உள்ள அம்மன் உணவகத்தில் வணிக வரித்துறை அதிகாரி செந்தில் தலைமையில் ஐந்து பேர் குழு நேற்று சோதனை நடத்தினர்.

இச்சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 3 நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment