Advertisment

பொங்கல் பண்டிகை: இயக்குனர் சேரன் ஊர் உட்பட பல இடங்களில் அரங்கேறிய சாதிக் கொடுமைகள்!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை, சேலம், திருவண்ணாமலை உள்பட பல இடங்களில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது, சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Community clash

Community clash in many places in tamilnadu

தமிழகம் முழுவதும் பொங்கள் பண்டிகை சமீபத்தில் தான் கோலாகலமாக நடந்து முடிந்தது. அதிலும் குறிப்பாக மதுரை மற்றும் சில பகுதிகளில் அரசு உதவியுடன் ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடந்தன.

Advertisment

பொங்கல் கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்ட நிலையில், தமிழகத்தில் சாதியின் பெயரை சொல்லி பல இடங்களில் நடந்த அத்துமீறல் சம்பவங்கள் இப்போதுதான் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன.  

அந்தவகையில் தமிழ் திரையுலகில் மண்வாசனையுடன் படங்களை இயக்கி பல தேசிய விருதுகளை பெற்றவர் இயக்குனர் சேரன். அவரது படங்களும் எளிய மனிதர்களையும், அவர்களது வாழ்வியலையும் பற்றிதான் பெரும்பாலும் பேசியிருக்கிறது.

இந்நிலையில் சேரனின் சொந்த ஊரான மதுரை, பழையூர்பட்டி கிராமத்தில் பொங்கல் அன்று, ஒரு சிலர் சாதிய அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை அருகே, வெள்ளலூர் நாடு, மேலூர் தாலுகாவில் இருக்கிறது பழையூர்பட்டி கிராமம். இதுதான் இயக்குனர் சேரனின் சொந்த ஊரும் கூட, இங்குதான் சமீபத்தில் சாதி கலவரம் நடைபெற்றுள்ளது. அதைத் தான் சேரன் வருத்தத்துடன் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் சேரன் கூறியிருப்பது:

இத்தனை வருடங்கள் இல்லாத நிகழ்வு என் கிராமத்தில் நடந்திருப்பது மனதை புண்படுத்துகிறது.. அங்கே எல்லோரும் இதுவரை தாய் பிள்ளைகளாக சாதி வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள்.. அந்த ஒற்றுமையை சிதைவதை பெரியவர்கள் தடுக்கவேண்டும்...

அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதும், கட்டி வைத்து அடித்ததும் உண்மையெனில் அது கண்டனத்திற்குரியது.  கிராம பெரியவர்கள் மற்றும் காவல் துறையினர் சரியான விசாரனையின் அடிப்படையில் நீதி காணவேண்டும்.. நம் மண்ணில் இனி இதுபோல் ஒன்று நடக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது ஆறுதல்கள்.

நடந்த விசயங்களை விசாரித்ததில் குற்றம் சுமத்தப்பட்ட அந்த இளைஞன் மற்றும் அவனின் கூட்டாளிகள் மேல் தான் தவறு என்பது ஊர்ஜிதமாகிறது.. அவன் கிராமத்திற்குள் போதைப்பொருள் வியாபாரம் செய்திருக்கிறான்..

இருமுறை காவல்துறை மூலம் எச்சரித்தும் மீண்டும் தொடரவே அதனால் இளைஞர்கள் கெடக்கூடும் என அச்சமடைந்த மக்கள் அவர்களை போலீசில் ஒப்படைக்க ஏற்பட்ட முயற்சியே திரித்து சொல்லப்பட்டிருக்கிறது.. தவறுகளை மறைத்து அவர்களை அடித்ததை மட்டும் சொல்லி புகாரை திசை திருப்பி இருக்கிறார்கள்.. இப்போது காவல்துறையும் பெரியவர்களும் தலையிட்டு சரியானதை அறிந்து அதற்கான முடிவு தேடும் முயற்சியில் இருக்கிறார்கள்..

எப்படியோ எங்கள் மண்ணின் பெயர் காப்பாற்றப்பட வேண்டும்.. தவறுகள் கலையப்பட்டு, உணர்த்தப்பட்டு.  நல்லவர்கள் தண்டிக்கப்படாமல் பகை மேலும் வளராமல் சுமூகமாக மாறினால் போதும்..  சிறுவர்களை இளைஞர்களை தவறான வழிக்கு திசை திருப்புவதை தடுக்க வேண்டும்..

இவ்வாறு இயக்குனர் சேரன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர் சங்கத்தமிழன்’ பேரலை என்னும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், மதுரையில் மூன்று இடங்களில் திட்டமிட்டு சாதிக்கலவரங்கள் அரங்கேறியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த கலவரங்கள் அனைத்தும்’ ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் நடைபெற்றுள்ளது என்பதை நாங்கள் இப்போது கண்டறிந்திருக்கிறோம். அப்பகுதியில் கள்ளர்கள் அதிகம் இருந்தாலும் இதுவரை, அங்கு சாதி கலவரங்கள் நிகழ்ந்ததில்லை. அதற்கு காரணம் அப்பகுதி மக்கள் கடவுள் மீது பயம் உள்ளவர்கள்.

ஆனால் இப்போது அங்குள்ள மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடிய போது, அதை பிடிக்காதவர்கள் திட்டமிட்டு, அம்மக்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல், சேலம் மாவட்டத்திலும் பொங்கல் கொண்டாடிய அருந்ததிய மக்கள் மீது, சாதி ஆதரவாளர்கள் தாக்குதலை நடத்திய மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் - வில்வனூரைச் சார்ந்த அருந்ததியினர் பொங்கல் விழா கொண்டாடியுள்ளனர். இதை சகித்துக் கொள்ள இயலாத சாதிவெறியர்கள் தாக்கியதில் அருந்ததிய மக்கள் ஏழு பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இதுபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகேயுள்ள வீராலூரில் பொதுப்பாதையில் அருந்ததியினர் சடலம் எடுத்துச்செல்லக் கூடாதென, சாதி வெறியர்கள் அருந்ததியினரின் குடியிருப்புக்குள் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதனிடையே இந்த சம்பவங்களில் ஈடுபட்ட அனைவரையும் வன்கொடுமைத் தடுப்பு, குண்டர்தடுப்புச் சட்டங்களின்கீழ் சிறைப்படுத்த வேண்டுமென விடுதலை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment