வானதி ஸ்ரீனிவாசன் மீது புகார்: திமுக பெண்களை தவறாக சித்தரித்து பேசியதால் சர்ச்சை

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த திமுக செயலாளர் வ.ம.சண்முக சுந்தரம் நேற்று புகார் அளித்துள்ளார்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த திமுக செயலாளர் வ.ம.சண்முக சுந்தரம் நேற்று புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
vanathi srinivasan

திமுக கட்சியை சேர்ந்த பெண்களை தவறாக சித்தரித்து பேசியதற்காக பாஜக எம்.எல்.ஏ.,ஆன வானதி ஸ்ரீனிவாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த திமுக செயலாளர் வ.ம.சண்முக சுந்தரம் நேற்று புகார் அளித்துள்ளார்.

அவரது மனுவில் தெரிவித்துள்ளதாவது:

‘‘பாஜக சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், கோவை வி.கே.கே.மேனன் சாலையில் சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.-வுமான வானதி சீனிவாசன், திமுக பிரதிநிதிகளையும், திமுக-வைச் சேர்ந்த பெண்களையும் தவறாக சித்தரிக்கும் உள் நோக்கத்துடன் பொது வெளியில் பேசியுள்ளார்.

Advertisment
Advertisements

சட்டம் ஒழுங்கை சீர் குலைக்கும் நோக்கத்துடன், அவதூறாக பேசிய வானதி சீனிவாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vanathi Srinivasan Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: