வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ். முருகன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பயனாளிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தங்கள் குறைபாடுகளைத் தீர்த்துக் கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் 16 இடங்களில் கோரிக்கை மனுப் பெட்டி வைக்கப்படும் என அறிவித்தார்கள்.
அதன்படி ஜூன் 3ந் தேதி முதல் 30ந் தேதி வரை அரசு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கோரிக்கை மனு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. உரிய ஆவணங்கள் அனைத்தையும் நகல் எடுத்து, மனுவுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
ஏற்கனவே மனு செய்திருந்தாலும், மீண்டும் இந்தக் கோரிக்கை மனு பெட்டியைப் பயன்படுத்திக் கொள்வது விரைவான தீர்வுக்கு வழி வகுக்கும்.
வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி எஸ் முருகன் அவர்கள் இன்று (06.06.2023) நந்தனம், சி.ஐ.டி. நகர், பட்டினம்பாக்கம் கோட்ட வீட்டு வசதி வாரிய அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கை பெட்டிகளை பார்வையிட்டு பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை பெட்டிகளில் போட ஏற்பாடு செய்துள்ள வசதிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மேற்பார்வை பொறியாளர்கள் ராமகிருஷ்ணன், சுபாஷ், செயற்பொறியாளர்கள் மஞ்சுநாதன், ராஜேந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil