சிறிய கடைகளுக்கு இப்போது நிறைவுச் சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி அறிவித்த சில நாட்களில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 28-ல் அத்துறை செயலர் காகர்லா உஷா பிறப்பித்த உத்தரவின்படி, , 300 சதுர மீட்டர் பரப்பளவில், 14 மீட்டருக்கு மிகாமல் கட்டப்பட்ட வணிகக் கட்டடங்களுக்கு பணிநிறைவுச் சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சட்ட திருத்தம் செய்வதற்கு முன் சிறு வணிக உரிமையாளர்கள் தண்ணீர், கழிவுநீர் மற்றும் மின்சார இணைப்புகளைப் பெறுவதற்கு பணிநிறைவுச் சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. இந்நிலையில் இது தற்போது மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில், மாநிலம் முழுவதும் 750 சதுர மீட்டருக்கும் குறைவான 8 குடியிருப்பு அலகுகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு பணிநிறைவுச் சான்றிதழ் பெறும் விதிமுறைகளைத் துறை தளர்த்தியது.
முன்னதாக, 750 சதுர மீட்டருக்கும் குறைவான மூன்று அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட குடியிருப்பு வளாகத்திற்கு நிறைவுச் சான்றிதழ் தேவையில்லை. தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019-ல் திருத்தம் செய்து மார்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
"சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில், 300 சதுர மீட்டருக்கும் குறைவான, 14 மீட்டர் உயரமுள்ள வணிக கட்டடங்களுக்கு பணிநிறைவு சான்றிதழில் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்'' என சட்டமன்றத்தில் அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“