சென்னையில் பொதுமக்கள் வெளியே வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அப்படி மாஸ்க் அணியாதவர்களுக்கு உடனடியாக ரூ.100 அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வருகிறது.
தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று ஒரு கட்டத்தில் 6 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக 1,800க்குள் பதிவாகி வருகிறது. மாநிலத்தில் தினசரி கொரோனா வைரஸ் தொற்று பரவலில் மிகப்பெரிய அளவில் பங்களிப்பு செய்த தலைநகர் சென்னையிலும் தொற்று எண்ணிக்கை குறைந்தது.
இதற்கு சென்னையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை நடைமுறைப்படுத்தியது ஒரு காரணமாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று உள்ள ஒருவரின் தும்மல், இருமல் ஆகியவற்றின் நீர்த்துளிகள் வழியாக மற்றொருவருக்கு பரவுகிறது என்பதால் அனைவரும் வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், சிலர், இந்த அறிவுரையைப் பொருட்படுத்தாமல், பொது இடங்களில் வெளியே முகக்கவசம் இல்லாமல் சுற்றித் திரிகின்றனர். இதனால், அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் தொற்று பரவலுக்கும் காரணமாகிறார்கள்.
இப்படி அலட்சியமாக முகக்கவசம் அணியாமல் வெளியே செல்லக் கூடாது என்பதை வலியுறுத்தியும் சென்னையில் மக்கள் வெளியே வரும்போது முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.100 அபராதம் விதிக்கும் முறையை சென்னை மாநராட்சி அமலுக்கு கொண்டுவருகிறது.
சென்னையில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்களிடம் காவலர்கள் உடனடியாக ரூ.100 அபராதம் விதித்து வசூலிப்பார்கள் என்று தெரிகிறது.
இதே போல, இதியாவின் முக்கிய நகரங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாவிட்டால் அபராதத் தொகையை அறிவித்துள்ளது.
டெல்லியில், மக்கள் பொது இடங்களில் வெளியே வரும்போது முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
அண்மையில், சென்னையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தவர்கள் முகக்கவசம் அணியவிலை என்று ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டதால் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”