scorecardresearch

போலி வாக்காளர் அடையாள அட்டைகளை அச்சிட்ட கம்ப்யூட்டர் மையம் சீல்

போலி வாக்காளர் அடையாள அட்டையை அச்சிட்டதற்காக சென்னை திண்டிவனத்தில் உள்ள கம்யூட்டர் சென்டரை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

போலி வாக்காளர் அடையாள அட்டைகளை அச்சிட்ட கம்ப்யூட்டர் மையம் சீல்

போலி வாக்காளர் அடையாள அட்டையை அச்சிட்டதற்காக சென்னை திண்டிவனத்தில் உள்ள கம்யூட்டர் சென்டரை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

57 வயதான செல்வராஜ், விழுபுரத்தில் உள்ள நடுவந்தல் கிராமத்தை சேர்ந்தவர். இவர் திண்டிவனத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ராகவேந்திர ப்ரிண்டர்ஸ் என்ற கம்யூட்டர் செண்டரிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டையை பெற்றிருக்கிறார். இவருக்கு ஆதார் அட்டையில் மாற்றங்கள் செய்ய வேண்டும்  என்று திண்டிவனம் இ- சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது இவரது வாக்களர் அடையாள அட்டையை காண்பித்துள்ளார். போலியான அடையாள அட்டை என்பதை உணர்ந்துகொண்ட இ- சேவை மைய ஊழியர்கள், தாசில்தார் வசந்த் கிருஷ்ணன், மற்றும் உதவி ஆட்சியர் அமித்திடம் இந்த விவரங்களை தெரிவித்தனர்.  

இதைத்தொடர்ந்து  போலி வாக்காளர் அட்டையை கொடுத்த கம்யூட்டர் செண்டரை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில் கம்யூட்டர் செண்டரை நடத்தி வந்த சுரேஷ் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Computer centre sealed for sale of fake voter id cards in tamil nadus tindivanam

Best of Express