பறை இசை கருவிகளை எடுத்து வந்த மாணவியை பாதி வழியில் இறக்கிவிட்ட விவகாரம் தொடர்பாக அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதா. நெல்லை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ படித்து வருகிறார். இவர் கல்லூரியில் நடைபெற்ற கலைவிழாவில் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து அவர் சொந்த ஊருக்கு செல்லும்போது, பறை உள்பட மற்ற இசைக்கருவிகளையும் பேருந்தில் எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்தில் ஏறியுள்ளார். தன்னிடம் இசைக்கருவிகள் இருப்பதை பேருந்து நடத்துடனர் மற்றும் ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளார். முதலில் அனுமதித்த நடத்துனர் கணபதி, பின்பு பறை உள்ளிட்ட இசைக் கருவிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். மேலும் வணர்பேட்டை பகுதியில், அந்த மாணவியை இறக்கிவிட்டுள்ளார். தொடர்ந்து பின்னால் வந்த பேருந்து ஒன்றில் அந்த மாணவி ஏறி சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நெல்லை அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டபோது, சமந்தபட்ட பேருந்து நடத்துனர் யார் என்பதை கண்டறிந்தனர். இந்நிலையில் பேருந்து நடத்துனர் கணபதி என்றும், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக, போக்குவரத்து அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கணபதியிடம் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil