கோவையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ எண்டிராலஜிஸ்ட் எனும் இரைப்பை மற்றும் குடல் நிபுணர்களின் மாநாட்டில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்றார்.
கோவையில் சர்வதேச அளவிலான கேஸ்ட்ரோ எண்டிராலஜிஸ்ட் எனும் இரைப்பை மற்றும் குடல் நிபுணர்களின் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலக அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த மருத்துவவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இரைப்பை மற்றும் குடல் மருத்துவ நிபுணர்களின் மாநாடு நடைபெற்றது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் இங்கிலாந்து, அமெரிக்கா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மருத்துவ நிபுணர்கள் பேராசிரியர்கள் என 500"க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்ட இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு மருத்துவ நிபுணர்களிடையே உரையாற்றினார்.
மேலும் இந்த மாநாட்டில் இரைப்பை மற்றும் குடலின் செரிமான கோளாறு உள்ளிட்ட நோயின் தன்மைகள்,அதன் பாதிப்பு, சிகிச்சை மற்றும் அண்மைக்கால சிகிச்சையின் குறித்த முன்னேற்றங்கள் குறித்து மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டன.
தற்போது உள்ள மக்கள் தொகையில் இரைப்பை, குடல் நோய் உள்ளவர்களை கண்டறிவதற்கான சிறந்த தகவல்கள் மற்றும் திறன்களைப் பெறவும் இந்த மாநாடு பயனளித்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“