செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்புக்கு அழைக்காத விவகாரம்; துரைமுருகன் கருத்துக்கு செல்வப்பெருந்தகை அதிருப்தி

உபரி நீர் திறப்பு குறித்த சம்பவத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் செல்வப்பெருந்தகை இருவரும் மாறி மாறி கூறியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

உபரி நீர் திறப்பு குறித்த சம்பவத்தில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் செல்வப்பெருந்தகை இருவரும் மாறி மாறி கூறியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
duraimurugan selvaperunthagai

வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் சூழலில் சென்னைக்கு நீர் வழங்கும் எரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியிலும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால், அந்த ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி நீர் திறப்பது என முடிவு செய்து கடந்த 21 ஆம் தேதி மாலை முதற்கட்டமாக 100 அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் அடுத்த நாள் 500 அடி நீர் திறக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது தொடர்பாக மக்கள் பிரதிநிதியான தன்னிடம் ஏன் தெரிவிக்கவில்லை என்று ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏவும் தமிழக காங்கிரஸ் தலைவருமான செல்வப்பெருந்தகை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.

Advertisment

அதிகாரிகளிடம் செல்வப்பெருந்தகை பேசுகையில், “ஒரு மக்கள் பிரதிநிதி சேர்மனுக்கும் தெரியல, மந்திரிக்கும் தெரியல, எம்.எல்.ஏ எனக்கும் தெரியல, எம்.பிக்கும் தெரியல,, நீங்களே திறந்து விட்டீங்கனா என்ன சார் இது? இந்த துறை அரசு துறைதானே. மக்கள் பிரதிநிதிகிட்ட ஒரு வார்த்தை சொன்னா என்ன? கால காலமா எப்பவுமே சொல்லி தானே திறக்கப்படுது. நானும் மூணு வருஷமா திறந்து விட்டிருக்கேன். போன வருஷமும் சொல்லாமல் திறந்துட்டீங்க,,,  

நீங்களே ஆட்சியாளர்களா, நீங்களே மக்கள் பிரதிநிதியா மாறுங்க.. இப்ப நான் தானே ஊர் ஊரா போக போறேன். 500 அடி திறந்துட்டாங்க கொஞ்சம் கவனமாக இருங்க என நான் தானே ஊர் ஊரான சொல்ல போறேன். இதுயெல்லாம் தப்பு இல்லையா. நீங்களே மக்கள் பிரிதிநிதியா ஆகிட்டா எதற்கு அரசாங்கம்?. அதிகாரிகளே அரசாங்கத்தை நடத்திடலாமே?. இந்த துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றே தெரியல. அவ்வளவு பிரெஸ்டிஜ். இவர்களெல்லாம் திறக்க கூடாது, தண்ணியே இவர்களெல்லாம் தொடக்கூடாதுனு வெறி பிடிச்சு கிடக்குதுங்க இந்த துறை. ஒரு அயோக்கியன் பொதுப்பணி துறையில இருக்கான். எப்ப தான் இந்த சாதி வெறியில் இருந்து மீளு வாங்கன்னு தெரியல'' என்றார்.

தொடர்ந்து ராணிப்பேட்டை வந்திருந்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செல்வப்பெருந்தகையின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், 'முதலில் செல்வப்பெருந்தகை ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் கட்சித் தலைவர் இப்படி சொன்னதற்காக நான் வருத்தப்படுகிறேன். பொதுவாகவே உண்மை என்னவென்று தெரிந்து பேச வேண்டும். பருவமழை முடிந்து மற்றொரு பருவமழை தொடங்கும் நேரத்தில் மேட்டூர் டேம் நிரம்பி இருந்தால் தான் முதலமைச்சர் வந்து திறப்பார். அந்த ஒன்றைத்தான் திறப்பார்கள்.

Advertisment
Advertisements

இதுபோன்ற சின்ன சின்ன ஆற்றுக்கு குறுக்காக கட்டி உள்ள அணைகளில் அதுபோல் பண்ண மாட்டார்கள். அதற்காக அவர் அவ்வளவு பெரிய பேச்சு பேசுகிறார். கூப்பிட வேண்டும் என்றால் கூப்பிடலாம் அது ஒன்றும் தப்பு கிடையாது. ஆனால் யாரும் கூப்பிட மாட்டார்கள். அங்கு ஒருத்தன் இருக்கிறான்; இங்கு ஒருத்தன் இருக்கிறான் என்று சொல்கிறார். நான் சொல்கிறேன் அங்கு ஒருத்தன் இருக்கிறான். அவனால்தான் இந்த தொல்லை'' என்றார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகையிடம் அமைச்சர் துரைமுருகன் கொடுத்த பதில் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த செல்வப்பெருந்தகை, ''அவர் பேசியது தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஒரு பொறுப்பில் உள்ள மூத்த அமைச்சர், ஒரு மாபெரும் இயக்கத்தின் பொதுச்செயலாளர் இப்படி பேசலாமா? இப்படி பேசியது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து என்று பேட்டியோ, குறையோ, குற்றமோ சொல்லவில்லை. நான் பேசி விட்டு வரும்போது யாரோ ஒருத்தர் களவு தனம் செய்து வீடியோ எடுத்திருக்கிறார். அது யார் எடுத்தார்கள் என்று தெரியாது. நான் இந்தியா கூட்டணியை சேர்ந்த அந்த பகுதி தலைவருடன் பேசிக்கொண்டு வருகிறேன். அதை பின்னாடி ஒருத்தர் முன்னாடி ஒருத்தர் எடுத்து போடுகிறார்கள்.

அதற்கு நான் பொறுப்பாக முடியாது. என்னுடைய தனி அறையில் என்னுடைய சொந்த கருத்துக்களை என்னுடைய தோழர்களுடன் நான் பகிர்ந்து கொள்வது அதை பத்திரிகை செய்தியாக ஆக்குவது வருத்தம் அளிக்கிறது. அது முடிந்து விட்டது. ஆனால் நான் மதிக்கின்ற மூத்த அமைச்சர் துரைமுருகன், பெரும் மரியாதைக்குரியவர் அப்படி பொதுவெளியில் நான் பேசியதை வருத்தம் அளிக்கிறது என்கிறார். நான் ஒரு மக்கள் பிரதிநிதி. ஏறக்குறைய 4.30 லட்சம் பேர் வசிக்கிறார்கள். அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் நான். என்னைக் கேட்டுவிட்டு திற என்று சொல்லவில்லை. எனக்கு எந்த ஒரு தகவல் சொல்லவில்லை என்று சொன்னேன்.

எதற்கு தகவல் சொல்லவில்லை என்று கேட்கிறேன் என்றால் அது என்னுடைய உரிமை.  தண்ணீர் அனகாபுத்தூர், பம்மல் ஆகிய பகுதிக்கு போகிறது. செம்பரம்பாக்கம், காவலூர் இருப்பதால் நான் ஒரு வார்த்தை அந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவருக்கு போன் பண்ணி சொல்லி இருப்பேன். திறக்கப் போகிறார்கள் குழந்தை எல்லாம் ஆத்து பக்கம் போக வேண்டாம். பெரியவர்களிடம் துணி துவைக்க போக வேண்டாம் என்று எச்சரிக்கை செய்வதற்காக கேட்கிறேன். இதைக் கேட்டதற்கே என் மீது குற்றச்சாட்டு சொன்னால் இதற்கு என்ன பதில். நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் ஆட்சியாளர்கள் என்பது வேறு அதிகாரிகள் என்பது வேறு. அதிகாரிகளை கேள்வி கேட்பதே பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் என்ன செய்ய முடியும்''என்றார்.

Selvaperunthagai Duraimurugan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: