/tamil-ie/media/media_files/uploads/2019/09/toll-information-system.jpg)
National Highways Authority of India, NHAI, Toll List, West Bengal Toll list, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், மேற்குவங்க பட்டியலில் தமிழக சுங்கச்சாவடி, Tamil Nadu Toll, Namakkal - Karur National Highways, Rasampalayan Toll, Confusion in NHAI Toll list
Tamil Nadu Toll in West Bengal Toll list: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளத்தில், சுங்கச்சாவடிகளைப் பற்றிய தகவலில் மேற்குவங்க மாநில பட்டியலில், தமிழக சுங்கச்சாவடி இடம் பெற்றுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும், தேசிய நெடுஞ்சாலைகளில் 530 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 58 உள்ளன. சுங்கச் சாவடிகளில் பெறப்படும் கட்டண விபரம், அவற்றின் அருகில் உள்ள மருத்துவமனைகள், போலீஸ் நிலையங்கள் ஆகியவற்றின் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தகவல்கல் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ள சுங்கச்சாவடி தகவலில் இடம் பெற்றுள்ளன.
இந்த சுங்கச்சாவடி தகவலில்தான் ஒரு குழப்பம் நேர்ந்திருக்கிறது. அது என்னவென்றால், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தில் உள்ள நாமக்கல் - கரூர் சாலையில் ராசம்பாளையன் சுங்கச்சாவடி மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சுங்கச் சாவடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி சுங்கச்சாவடி தகவல் சிஸ்டம் பக்கத்தில் மேற்குவங்க மாநில சுங்கச்சாவடி பட்டியலில் 528வது வரிசை எண்ணில் தமிழகத்தின், நாமக்கல் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, ராசம்பாளையம் சுங்கச்சாவடியின் பெயர் உள்ளது.
இப்படி தவறாக இடம்பெற்றுள்ளதால் வாகன ஓட்டிகள், பயணிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியான பிறகும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரிகள் சரி செய்யவிலை. இதனால், சுங்கச்சாவடி கட்டண வசூலில் ஆர்வம் காட்டும் அதிகாரிகள் இதுபோன்ற குழப்பங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.