/tamil-ie/media/media_files/uploads/2023/01/Selvaperunthagai.jpg)
காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற நிலையில் எம்.பி. பதவியை இழந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுக்க போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகையின்போது கருப்பு கொடி காட்டப்படும் என காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
20,972 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ஒருங்கிணைந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதுமலை புளிகள் காப்பகத்தில், உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு பிரதமர் மோடி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.