/tamil-ie/media/media_files/uploads/2021/07/sasikanth-senthil.jpg)
மக்களவை தேர்தலுக்காக மத்திய வார் ரூம் அமைத்த காங்கிரஸ்; தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் நியமனம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் மத்திய ’வார் ரூம்’ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
2024 மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க.,வை வீழ்த்துவதற்காக எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, நேர்காணல் குழு உள்ளிட்ட குழுக்களை காங்கிரஸ் கட்சி அமைத்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று மத்திய 'வார் ரூம்' அமைக்கப்பட்டுள்ளது.
கட்சியின் தலைவரை மக்கள் மத்தியில் கொண்டு செல்வது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை 'வார் ரூம்' மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார் ரூமின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருண் சந்தோஷ், அரவிந்த் குமார், நவீன் சர்மா உள்ளிட்டோர் இதன் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதோடு வார்ரூம் தகவல் தொடர்பு பிரிவு தலைவராக வைபவ் வாலியா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
Congress President Shri @kharge has constituted the Central War Room for the General Elections, 2024, as follows, with immediate effect. pic.twitter.com/8amXIRHU0F
— Congress (@INCIndia) January 6, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.