scorecardresearch

3 முதல்வர்கள் தொடங்கி வைக்க… ராகுல் நடத்தும் யாத்திரை: தினமும் இத்தனை கி.மீ நடக்கிறார்

யாத்திரை தொடங்குவதற்கு முன், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை மற்றும் காமராஜர் நினைவிடம் ஆகியவற்றையும் ராகுல் காந்தி பார்வையிடுகிறார்.

3 முதல்வர்கள் தொடங்கி வைக்க… ராகுல் நடத்தும் யாத்திரை: தினமும் இத்தனை கி.மீ நடக்கிறார்
Bharat jodo yatra

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ‘பாரத் ஜோடோ யாத்திரை’ எந்த வகையிலும் ‘மன் கி பாத்’ அல்ல, மக்களின் கவலைகள் மற்றும் கோரிக்கைகள் டெல்லியை சென்றடைவதை உறுதி செய்வதே அதன் நோக்கம் என்று திங்களன்று காங்கிரஸ் கூறியது.

ராகுல் காந்தி 100க்கும் மேற்பட்ட ‘பாரத் யாத்ரிகள்’ உடன் கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கும் யாத்திரையின் கீதத்தை எதிர்க்கட்சியினர் வெளியிட்டனர். சுதந்திர இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத மக்கள் தொடர்புத் திட்டமாக யாத்ராவைக் கட்சி அறிவித்துள்ளது.

யாத்ரா கீதம்’ புது தில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில், கட்சியின் தகவல் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், செய்தியாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கும் பாரத் ஜோடோ யாத்திரையின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், 28 இடங்களில் மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளர்கள் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர்.

யாத்திரைக்கு யார் தலைமை தாங்குவார்கள் என்றும், அக்டோபர் 19 ஆம் தேதி புதிய காங்கிரஸ் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும்போது, ​​யாத்ராவின் தலைமையில் மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரமேஷ், ராகுல் காந்தி யாத்திரையை வழிநடத்தவில்லை, மாறாக மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்த மற்றவர்களுடன் நடந்து செல்கிறார்என்றார்.

யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

யாத்ரா அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று ரமேஷ் கூறினார்.

செப்டம்பர் 7-ம் தேதி ‘பாரத் ஜோடோ யாத்திரை’ தொடங்குவதற்கு முன்னதாக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோர் கலந்து கொண்டு, ராகுல் காந்தியிடம், காதி தேசிய கொடியை ஒப்ப்படைப்பார்கள் என்று ரமேஷ் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்குப் பிறகு, ராகுல் காந்தி, மற்ற காங்கிரஸ் தலைவர்களுடன் யாத்திரை தொடங்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு நடந்து செல்கிறார்.

கன்னியாகுமரியில் இருந்து ஸ்ரீநகர் வரையிலான 3,570 கிலோமீட்டர் தூர யாத்திரை முறையாக தொடங்கப்பட்டாலும், உண்மையில் செப்டம்பர் 8 ஆம் தேதி காலை 7 மணிக்கு தான் பேரணி தொடங்கும், அப்போது காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் பயணத்தைத் தொடங்குவார்கள்.

பாத யாத்திரை’ காலை 7-10:30 மற்றும் மாலை 3:30 முதல் மாலை 6:30 வரை என இரண்டு தொகுதிகளாக நடைபெறும்.

காலை பேரணியில் குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் இருக்கும் போது, ​​மாலையில் மக்கள் அணிதிரள்வது காணலாம். சராசரியாக, பாத யாத்ரிகள் தினமும் 22-23 கி.மீ., நடந்து செல்வார்கள் என்று ரமேஷ் கூறினார்.

பிரதான யாத்திரையுடன் ஒரே நேரத்தில், அசாம், திரிபுரா, பீகார், ஒடிசா, சிக்கிம், மேற்கு வங்காளம் மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்களில் தனி சிறிய அளவிலான பாரத் ஜோடோ யாத்ராக்கள் இருக்கும் என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Congress bharat jodo yatra kanyakumari to kashmir rahul gandhi